08 பிப்ரவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி வேகமாக வளர்ச்சியடைந்துள்ளது: அருண் ஜேட்லி
- கடந்த 2010 ம் ஆண்டின் உலகளாவிய பொருளாதார மந்த நிலை காரணமாக இந்தியா மோசமாக பாதிப்புக்குள்ளானது. எனினும் கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியா உலக அளவில் மிக உயர்ந்த வளர்ச்சியை எட்டியுள்ளது.
- சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி போன்ற நிறுவனங்கள் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவை அங்கீகரித்துள்ளன என்பது இந்தியாவின் முன்னேற்றத்தின் ஒரு அடையாளமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
டெல்லி மாணவர் “இளைய இந்தியா மாணவர்” விருதை வென்றார்
- கட்டுரை போட்டிக்காக பிரிட்டன் பாத் பல்கலைகழகத்தால் வழங்கப்படும் “இந்த வருடதிற்கான இளைய இந்தியா மாணவர் விருதை டெல்லியை சேர்ந்த வசந்த் வேலி பள்ளி மாணவர் வென்றார்.
- இந்தியா முழுவதும் மாணவர்களிடையே நடைபெற்ற இப்போட்டியில் நமித் மேகிஜா இந்த விருதை வென்றார்.
நீட் தேர்வு மே.6-ஆம் தேதி நடைபெறும்: அதிகாரப்பூர்வ அறிவிப்பாணை வெளியீடு
- எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கான இவ்வாண்டு 'நீட்' நுழைவுத் தேர்வு வரும் மே மாதம் 6-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு
- மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 330.45 புள்ளிகள் உயர்ந்து 34,413.16 புள்ளிகளாக உள்ளன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100.15 புள்ளிகள் உயர்ந்து 10,576.85 புள்ளிகளாக இருந்தன.
சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட முதல் கார்
- பால்கோன் ஹெவி' என்ற உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி நிலையத்திலிருந்து ஏவப்பட்டது.
- ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்தால் இந்த ராக்கெட் தயாரிக்கப்பட்டது.
- இந்த 'பால்கோன் ஹெவி' ராக்கெட்டில் ஒரு ஸ்போர்ட்ஸ் கார் வைக்கப்பட்டது. இதுவே விண்வெளிக்கு செல்லும் முதல் காராகும்.
சச்சின் சாதனைகளை நெருங்கும் கோலி!
- தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி 34-வது சதம் பதிவு செய்தார்.
- தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன் விராட் கோலி 34-வது சதம் பதிவு செய்தார்.
- இதன்மூலம் தென் ஆப்பிரிக்காவில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கள், கேப்டனாக அதிக ஒருநாள் சதங்கள் எடுத்தவர்கள், அதிக ஒருநாள் சதங்கள், இந்திய கேப்டனாக அதிக சதங்கள்
- என மேலும் பல சாதனை பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.
200 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை நிகழ்த்திய இந்திய வீராங்கனை!
- ஜுலன் கோஸ்வாமி - இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திரம். சாதனை வீராங்கனை.
- 35 வயதான ஜுலன், ஒருநாள் கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீராங்கனை என்கிற சாதனையைப் படைத்துள்ளார். 5-வது ஓவரில் தெ.ஆ. வீராங்கனை லாராவின் விக்கெட்டை வீழ்த்தி சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார்.