07 பிப்ரவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

ரஷ்ய அதிபர் தேர்தல்: வேட்பாளராக புடின் பெயர் பதிவு
  • ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைவதையடுத்து அதிபர் தேர்தல் மார்ச் 18-ம் தேதி நடத்திட மத்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.
  • இத்தேர்தலில் மீண்டும் அதிபர் பதவி்க்கு போட்டியிட வேண்டி விளாடிமிர் புடின், மத்திய தேர்தல் ஆணையத்திடம் தனது பெயரை பதிவு செய்தார். புடினை வேட்பாளராக அங்கீகரித்து 3 லட்சத்து 14 ஆயிரத்து 837 பேர் கையெழுத்திட்டுள்ளனர். 
ஆசிய பல்கலைக்கழக தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. 103–வது இடத்தை பிடித்தது
  • ஆசிய அளவில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசை நேற்று வெளியிடப்பட்டது. 
  • அதன்படி சிங்கப்பூரை சேர்ந்த தேசிய பல்கலைக்கழகம் முதல் இடத்தை பிடித்து உள்ளது. சீனாவின் சிங்குவா பல்கலைக்கழகம் 2–வது இடத்தை பெற்றது.
  • இந்தியாவை சேர்ந்த 42 பல்கலைக்கழகங்கள் இந்த தரவரிசையில் இடம் பெற்றுள்ளன. இருந்தாலும் பல பல்கலைக்கழங்கள் தங்கள் தரவரிசையில் சறுக்கி உள்ளன. இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (பெங்களூரு) 2 இடம் சறுக்கி 29–வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி. 2 இடம் இறங்கி 44–வது இடத்தையும் பிடித்தது.
  • சென்னை ஐ.ஐ.டி 41 இடங்கள் சறுக்கி 103–வது இடத்தை பெற்றது. இந்திய சுரங்க கல்வி நிறுவனம் 141–வது இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் 194–வது இடத்தையும் பிடித்து முதல் முறையாக தரவரிசையில் இடம் பெற்று உள்ளது.
உலக வங்கி அதிகாரிகள் 26ல் கோவை வருகை
  • நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள, 20 அணைகளில், மின் வாரியம், புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. 
  • இதற்கு, உலக வங்கி, 260 கோடி ரூபாய் நிதி உதவி செய்துள்ளது. அப்பணிகளை பார்வையிட, மத்திய நீர் வளத்துறை அதிகாரிகள், 12 மாநிலங்களின் உலக வங்கி அதிகாரிகள், மின்சாரம் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் வரும், 26ம் தேதி, தமிழகம் வர உள்ளனர்.
உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு தனி அதிகாரியாக அருண் ராய் ஐ.ஏ.எஸ். நியமனம்
  • இந்த ஆண்டு நடத்தப்படும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான தனி அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி அருண் ராய் நியமிக்கப்பட்டுள்ளார்.
'அக்னி' சோதனை வெற்றி
  • அணு ஆயுதத்தை ஏந்தி செல்லக்கூடிய,குறுகிய துார இலக்கை தாக்கும், 'அக்னி -- 1' ஏவுகணை, வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
  •  உள்நாட்டு தொழில்நுட்பத்துடன், உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட, அணு ஆயுதத்தை ஏந்தி செல்லக்கூடிய இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம், பாலசோரில் உள்ள, ராணுவ மையத்தில் சோதித்து பார்க்கப்பட்டது.
காமன்வெல்த் பாட்மிண்டன் இந்தியாவுக்கு எளிதானது குரூப் சுற்று
  • 2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் ஏப்ரல் 4 முதல் 15-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளது.
  • பாட்மிண்டனில் இந்தியா, 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் பாகிஸ்தான், ஸ்காட்லாந்து, இலங்கை அணிகள் இடம்பெற்றுள்ளதால், இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் எனத் தெரிகிறது.