06 பிப்ரவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

சிறந்த நெசவாளர் தேசிய விருது காஞ்சி பெண்ணுக்கு கிடைத்தது
  • சிறந்த கைத்தறி நெசவாளருக்கான தேசிய விருது, காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, பெண் நெசவாளருக்கு கிடைத்துள்ளதாக, மத்திய அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • அதுபோல, சிறந்த பட்டு சேலை விற்பனைக்கான விருது, காஞ்சிபுரம் அண்ணா பட்டு கூட்டுறவு சங்கத்திற்கும், சிறந்த நெசவாளர்களுக்கான தேசிய தரச்சான்றிதழ், மேலும் இரு நெசவாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு பிரதமர் மோடி பயணம்
  • பிப்., 10ல், வளைகுடா நாடுகளில் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு, பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், ஆறாவது உலக அரசு மாநாடு, 10, 11ல் நடக்கிறது. இதில் பங்கேற்க, பிரதமர் மோடி, உயரதிகாரிகள் குழுவுடன் செல்கிறார்.
இந்திய அளவில் 2-வது இடம்: தமிழகத்தில் சரக்கு-சேவை வரி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூல்
  • தமிழகத்தில் சரக்கு- சேவை வரி(ஜி.எஸ்.டி.) இலக்கை தாண்டி ரூ.19 ஆயிரத்து 592 கோடி வசூலாகி உள்ளது.
  • ஜி.எஸ்.டி. மூலம் மத்திய அரசுக்கு அதிக வரி வருவாயை ஏற்படுத்திய மாநிலங்கள் பட்டியலில் முதல் 3 இடங்களை மராட்டியம் (16 சதவீதம்), தமிழ்நாடு (10 சதவீதம்), கர்நாடகம் (9 சதவீதம்) பெற்று இருக்கிறது. லட்சத்தீவு கடைசி இடத்தில் உள்ளது என்று பொருளாதார கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜூனுக்குள் சந்திராயன் - 2 செலுத்த இஸ்ரோ திட்டம்
  • அடுத்த, ஐந்து மாதங்களில், சந்திராயன் - 2 உட்பட, ஐந்து செயற்கைக்கோள்களை அனுப்புவதற்கு, இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு திட்டமிட்டுள்ளது.
நிடி ஆயோக் சி.இ.ஓ. பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு
  • திட்டக்குழு கலைக்கப்பட்டு நிடி ஆயோக் ஏற்படுத்தப்பட்டது. அதன் தலைமை நி்ர்வாகியாக கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரியில் அமிதாப் கா்ந்த் நியமிக்கப்பட்டார். அவரது பதவி காலம் இம்மாதத்துடன் நிறைவடைகிறது. 
  • இந்நிலையில் பதவிகாலத்தை மேலும் ஓராண்டிற்கு நீட்டித்து மத்திய அமைச்சரவைக்கான நியமன கமிட்டி இன்று உத்தரவிட்டது. இதையடுத்து அவர் 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை பதவியில் நீடிப்பார்.
உலக ஜூனியர் டேபிள் டென்னிஸ்: மானவ் தக்காருக்கு வெள்ளி
  • லக்ஸம்பர்க்கில் நடைபெற்ற ஐடிடிஎஃப் உலக ஜூனியர் சர்கியூட் ஃபைனல்ஸ் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் மானவ் தக்கார் வெள்ளிப் பதக்கம் வென்றார்.