03 பிப்ரவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

அசாமில் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு: மோடி பங்கேற்பு
  • வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் விதமாக அசாமி்ல் இன்று உலக முதலீட்டாளர்கள் மாநாடு துவங்குகிறது. 
  • பிப்.3 மற்றும் 4-ம் தேதி நடக்கும் இந்த மாநாட்டில் 20 நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள், தொழில்வல்லுனர்கள் உள்பட 4500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார். 
  • அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால், மற்றும் இந்திய தொழிலதிபர்களான ரத்தன் டாடா, முகேஷ் அம்பானி உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். 
புதுச்சேரி வருகிறார் பிரதமர் மோடி
  • ஆரோவில் உதய தினத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி வரும் 28 ம் தேதி புதுச்சேரி வர உள்ளதாக மாநில பா.ஜ., தலைவர் சுவாமிநாதன் கூறியுள்ளார்.
காலநிலை பாதிப்பு அறிய புதிய ஆராய்ச்சி மையம்
  • காலநிலையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, சிறந்த விஞ்ஞானிகள் உதவியுடன், பாரதியார் பல்கலைக் கழகத்தில், புதிய ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும், என, துணைவேந்தர், கணபதி தெரிவித்தார்.
'பில்ட் இன்டெக் -2018' கண்காட்சி துவக்கம்
  • கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில், கட்டுமான தொழில் கண்காட்சி, 'பில்ட் இன்டெக் --- 2018' நேற்று துவங்கியது.
  • கண்காட்சியில், கட்டுமானத்துறையில் நவீன தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன. தட்டுப்பாடான மணல், செங்கல் போன்ற பொருட்களுக்கு மாற்றுப் பொருட்கள், கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. 
'பயங்கரவாத ஒழிப்பு' : இந்தியாவுக்கு பாராட்டு
  • இது குறித்து, அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர், டானா ஒயிட், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில், அமெரிக்காவின் திட்டங்களுக்கு, இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது. தெற்காசிய பிராந்தியத்தில், பயங்கரவாதத்தை ஒழித்து, அமைதி நிலைபெறச் செய்யும் முயற்சியில், இந்தியா மிகப்பெரிய அளவில் பணியாற்றி வருகிறது.ஆப்கானிஸ்தானில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைக்கு பின், அந்நாட்டின் மறு கட்டமைப்பு பணிகளுக்காக, ஆசியாவின் வேறெந்த நாடுகளும் வழங்காத அளவுக்கு, இந்திய அரசு மிகப்பெரிய தொகையை வழங்கி உள்ளது. புனரமைப்பு பணிகள், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில், அமெரிக்காவின் நடவடிக்கைகளுக்கு, இந்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
யு-19 உலகக் கோப்பை இறுதி ஆட்டம் : இன்று இந்தியா-ஆஸ்திரேலியா பலப்பரீட்சை
  •  பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சனிக்கிழமை மோதுகின்றன.
  • இரு அணிகளுமே தலா 3 முறை உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ள நிலையில், 4-ஆவது முறையாக வாகை சூட இரு அணிகளுமே கடுமையாகப் போட்டியிடும் என்பதில் சந்தேகம் இல்லை.
'விளையாடு இந்தியா' போட்டி: சென்னை சிறுவனுக்கு வெள்ளி
  • பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான 'விளையாடு இந்தியா' போட்டியில் துப்பாக்கி சுடுதலில் சென்னையைச் சேர்ந்த ரித்திக் ரமேஷ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.