02 பிப்ரவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
கடலோர காவல் படை தினம்: கவர்னர் பங்கேற்பு
- கடந்த, 1978ல், ஏழு கப்பல்களோடு துவங்கப்பட்ட கடலோரக் காவல் படை, தற்போது, 62 விமானங்கள், 134 கப்பல்கள் மற்றும் படகுகள் என, உலகின் நான்காவது பெரிய கடலோர காவல் படையாக உருவெடுத்துள்ளது.
- இந்திய கடலோர காவல் படை தினம், ஆண்டுதோறும், பிப்., 1ல் அனுசரிக்கப்படுகிறது.
- இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், கவர்னர் பங்கேற்று, நினைவு மலரை வெளியிட்டார்.
- அவருக்கு, நினைவுப் பரிசை, கடலோர காவல் படை ஐ.ஜி., ராஜன் பர்கோத்ரா வழங்கினார்.
என்.எஸ்.ஜி.புதிய இயக்குனர் ஜெனரல் பொறுப்பேற்பு
- என்.எஸ்.ஜி. எனப்படும் தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜெனரலாக இருந்த எஸ்.பி.சிங் நேற்று ஒய்வு பெற்றார். இப்பதவிக்கு சுதீப் லக்தாகியா பெயரை பிரதமர் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை கடந்த மாதம் 19-ம் தேதி ஒப்புதல் அளித்தது.
- இதன்படி சுதீப் லக்தாகியா பொறுப்பேற்றார். இவர் 1984-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் இருந்து ஐ.பி.எஸ். கேடராக தேர்வு பெற்றார். சி.ஆர்.பி.எப். எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் சிறப்பு டி.ஜி. உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகள் வகித்தவர் என்பது குறிப்பிடதக்கது.
மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தக பாதை: ஆஷ்காபாத் ஒப்பந்தத்தில் இணைந்தது இந்தியா
- ஆஷ்காபாத் ஒப்பந்தம் ஈரான், ஓமன், துர்மெனீஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான் ஆகிய நாடுகள் இணைந்து சர்வதேச வர்த்தகத்தினை மேம்படுத்த 2011-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டன.. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா இணைந்து கொள்ள வலியுறுத்தியது. இதன்படி இந்தியாவையும் இணைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது.
- இது தெடர்பாக நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆஷ்காபாத் ஒப்பந்தத்தில் இந்தியாவையை சேர்த்துக்கொள்வதற்கான கோரிக்கையை நான்கு நாடுகளும் ஏற்றுக்கொண்டன. .
- பிப்.3-ம் தேதி முதல் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வருகிறது.
- இவ்வாறு மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.
- வருமான வரி உச்சவரம்பில் மாற்றமில்லை.
- சம்பளதாரர்கள், மருத்துவ மற்றும் போக்கு வரத்திற்கு, 40 ஆயிரம் ரூபாய் வரை, வருமான வரி விலக்கு பெறலாம்; இது ஏற்கனவே, 15 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
- மூத்த குடிமக்கள், 50 ஆயிரம் ரூபாய் வரை, மருத்துவ காப்பீடுகளுக்கு வரி விலக்கு பெறலாம்.
- மூத்த குடிமக்கள் சேமிப்பில் கிடைக்கும் வட்டிக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரி விலக்கு. இதற்கு முன், 10 ஆயிரம் ரூபாயாக இருந்தது.
விரிவாக படிக்க Daily GK பகுதியை இன்று மாலை பார்க்கவும்விரைவில் 8 சதவீத வளர்ச்சி நிதி அமைச்சர் நம்பிக்கை
- இந்தியா, 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை நோக்கி, உறுதியான பயணத்தை மேற்கொண்டு உள்ளது; விரைவில், உலகின், ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா திகழும்,'' என, நிதியமைச்சர், அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்: விளையாட்டுத் துறைக்கு ரூ.2,196 கோடி ஒதுக்கீடு
- 2018-19-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அமைச்சகத்துக்கு ரூ.2,196.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஓபன் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் மேரி கோம்
- இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் மகளிருக்கான 48 கிலோ பிரிவில் இந்தியாவின் மேரி கோம் தங்கப் பதக்கம் வென்றார். மகளிர் பிரிவில் மொத்தமாக இந்தியா 5 தங்கங்களை தட்டிச் சென்றது.