01 பிப்ரவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
தகுதி அடிப்படையில், 'விசா' டிரம்ப் அறிவிப்பு திறமையான இந்தியர்களுக்கு இனி நிம்மதி
- இந்தியர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், தகுதி மற்றும் திறமை யின் அடிப்படையில் விசா வழங்கப்படும் என்பது உள்ளிட்ட புதிய, 'விசா' நடைமுறை திட்டங்களை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு
- மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இன்று, 2018 - 19ம் நிதியாண்டின் மத்திய பட்ஜெட்டை, பார்லிமென்டில் தாக்கல் செய்ய உள்ளார்.
சரக்கு அனுப்ப இன்று முதல் 'இ - வே பில்' கட்டாயம்
- நாட்டில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பு அமலானதைத் தொடர்ந்து, தடையற்ற வர்த்தகத்திற்காக, மாநிலங்களின் எல்லைப் புறங்களில் உள்ள சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டன.
- அதற்கு பதிலாக, சரக்கு களை அனுப்புவோர், அது குறித்த விபரங்களை, 'இ - வே பில்' எனும் இணைய வழி ரசீதில், அவர்களே சுயமாக குறிப்பிட்டு, எடுத்துச் செல்லும் நடை முறை, இன்று முதல் அமலுக்கு வருகிறது. மாநிலம் விட்டு மாநிலம், சரக்குகளை எடுத்துச் செல்வதற்கு, இ - வே பில் பெறுவது, நாடு முழுவதும் கட்டாயமாகி உள்ளது.
எந்த வங்கியிலும் ஆதாரை பதிய வசதி
- வங்கிகளில் செயல்படும், ஆதார் மையங்களில், வேறு வங்கி வாடிக்கையாளர்கள், வங்கிக் கணக்கே இல்லாத பொதுமக்களும், ஆதார் பதிவு மற்றும் திருத்தங்களை செய்யலாம்.
'கரஞ்ச்' நீர்மூழ்கி கப்பல் வெற்றிகரமாக சோதனை
- நாட்டின் கடற்படை பலத்தை மேம்படுத்த, நவீன ரக போர் கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்களை, உள்நாட்டிலேயே தயாரிக்கும் பணிகள் துவங்கி நடந்து வருகின்றன.
- அந்த வகையில், மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில் உள்ள எம்.டி.எல்., நிறுவனத்தில் கட்டப்பட்ட, ஸ்கார்பியன் ரக நீர் மூழ்கி கப்பலான, ஐ.என்.எஸ்., கல்வாரி, கடந்த ஆண்டு டிசம்பரில், கடற்படையில் சேர்க்கப்பட்டது.
- மற்றொரு நீர் மூழ்கி கப்பலான, காந்தாரி, அறிமுகம் செய்யப்பட்டு, சோதனை ஓட்டத்தில் உள்ளது. உள்நாட்டிலேயே ஏற்கனவே இரண்டு கப்பல்கள் கட்டப்பட்டுவிட்டன. மூன்றாவதாக, ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான, கரஞ்ச் வடிவமைக்கப்பட்டு, நேற்று சோதனை ஓட்டத்திற்கு விடப்பட்டது.
சாய் இயக்குநராக நீலம் கபூர் நியமனம்
- இந்திய விளையாட்டு ஆணையத்தின் (சாய்) இயக்குநராக மூத்த இந்திய தகவல் பணி அதிகாரி நீலம் கபூர் புதன்கிழமை நியமிக்கப்பட்டார்.
இந்திய ஓபன் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேரி கோம்
- இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியின் மகளிர் பிரிவில், 5 முறை உலக சாம்பியனான இந்தியாவின் மேரி கோம் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
'கேலோ இந்தியா' போட்டிகளில் தமிழகத்திற்கு ஐந்து பதக்கங்கள்
- விளையாட்டு மேம்பாட்டிற்கான தேசிய திட்டம், 'கேலோ இந்தியா'வின் ஒரு பகுதியாக, 'கேலோ இந்தியா பள்ளி விளையாட்டுப் போட்டிகள்' மத்திய அரசின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான, கேலோ இந்தியா பள்ளி விளையாட்டு போட்டிகள், நேற்று, டில்லியில் துவங்கியது.
- முதல் நாளில், தமிழக மாணவர்கள், ஐந்து பதக்கங்கள் வென்று, சாதனை படைத்துள்ளனர்.
'விளையாடு இந்தியா' போட்டி: தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
- மத்திய விளையாட்டு அமைச்சகத்தால் முதல் முறையாக நடத்தப்படும் பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான 'விளையாடு இந்தியா' போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
- இந்நிகழ்ச்சியில், மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், தில்லி துணைநிலை ஆளுநர் அனில் பய்ஜால், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரிந்தர் பத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- விளையாடு இந்தியா' போட்டியில் மொத்தம் உள்ள 16 பிரிவு விளையாட்டுகளில் 29 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 5,000 பள்ளி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர். பிப்ரவரி 8-ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் தலா 199 தங்கம், வெள்ளிப் பதக்கங்களும், 275 வெண்கலப் பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன.
இன்று- 2003 பிப்ரவரி 1
- கல்பனா சாவ்லா, ஹரியானா மாநிலம், கர்னல் எனும் ஊரில், 1962 மார்ச் 17ல் பிறந்தார். விண்வெளி பொறியியலில் முனைவர் பட்டம் பெற்ற இவர், 1995ல், அமெரிக்காவின் நாசா விண்வெளி வீரர் பயிற்சி குழுவில் இடம் பெற்றார். 1996ல் விண்வெளி பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்டார்.கொலம்பியா விண்வெளி ஊர்தியான, எஸ்.டி.எஸ் - 87 என்ற விண்கலத்தில் பயணித்த ஆறு வீரர்களில், கல்பனாவும் இடம் பெற்று இருந்தார்.
- தன் முதல் விண்வெளி பயணத்திலேயே, 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 1 கோடி கி.மீ., பயணித்து, பூமியை சுற்றி, 252 முறைகள் வலம் வந்துள்ளார்; விண்வெளியில், 372 மணி நேரங்கள் இருந்துள்ளார்.
- ஏழு வீரர்களுடன், எஸ்.டி.எஸ் - 107 என்ற கொலம்பியா விண்கலத்தில் பயணிக்க தேர்ந்தெடுக்கப்பட்டார். 2003 பிப்., 1ல் விண்வெளி யில் இருந்து, பூமிக்கு விண்கலம் திரும்பும்போது, வெடித்து சிதறியதில், சாவ்லா மரணம் அடைந்தார். அவர் இறந்த தினம் இன்று.