30 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

வெளியுறவுத் துறையின் புதிய செயலராக கேசவ் பொறுப்பேற்பு
  • வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஜெய்சங்கர், நேற்றுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து, வெளியுறவுத் துறையில், பொருளாதார பிரிவின் செயலராக பணியாற்றி வந்த, விஜய் கேசவ் கோகலே, 58, வெளியுறவுத் துறையின் புதிய செயலராக நேற்று பொறுப்பே ற்றார். 
  • விஜய், சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையே நடந்த டோக்லாம் பிரச்னையில், சுமுக தீர்வு ஏற்பட, முக்கிய பங்காற்றியவர்.
நடப்பு நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.75 சதவீதம்-ஆய்வறிக்கையை வெளியிட்டார் ஜெட்லி
  • பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று துவங்கியது. இதில், மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, நடப்பு நிதியாண்டிற்கான, பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். 
  • அதில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில், 6.75 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த நிதியாண்டில், இது, 7.5 சதவீதமாக உயரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோ - திபெத் படைக்கு அணிவகுப்பில் முதல் பரிசு
  • குடியரசு தின விழா அணிவகுப்பு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், தலைநகர் டில்லியில் நடந்தது; இதில், ராணுவம், துணை ராணுவம், போலீஸ் உட்பட பல்வேறு படைகளின் அணிவகுப்பு நடந்தது. 
  • இதில், சிறப்பாக செயல்பட்டவர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு, ராணுவ அமைச்சர் கோப்பை வழங்குவார். 
  • இந்த முறை, இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினர், சிறந்த அணிவகுப்பு செய்த படையாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதற்கான கோப்பையை, ராணுவ அமைச்சர், நிர்மலா சீதாராமன், அவர்களுக்கு விரைவில் வழங்க உள்ளார்.
ரூ.54 ஆயிரம் கோடியில் புதிய மின் திட்டங்கள் : முதல்வர் பழனிசாமி தகவல்
  •  ''எதிர்கால மின் தேவை கருதி, 53 ஆயிரத்து, 890 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 9,300 மெகா வாட் அளவுக்கு, புதிய மின் திட்டங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
ஆதார், வங்கி கணக்கு விபரம் காக்க அறிமுகமாகிறது புதிய மென்பொருள்
  • ஆதார், மொபைல்போன் எண், வங்கி கணக்கு போன்றவற்றின் தகவல்கள் கசியாமல் பாதுகாக்க, நவீன மென்பொருளை, அண்ணா பல்கலை அறிமுகம் செய்ய உள்ளது. 
  • இதற்காக, பல்கலையில் சிறப்பு ஆராய்ச்சி மையம், பிப்., 1ல், திறக்கப்பட உள்ளது.
"மூன்று நிலா" நாளை வானில் ஒரு அதிசயம்
  • சந்திரகிரகணத்து அன்று பெரிய நிலா, ரத்த நிலா, நீலநிற நிலா என மூன்றுவித நிலாவும் வானில் தோன்றும் அதிசயம்நாளை (ஜன., 31), அரங்கேற உள்ளது.
  • ஆண்டுதோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளியில் சூப்பர் மூன்(பெரிய நிலா) ஏற்படுவது வழக்கம். நாளைய சிறப்பம்சம் என்னவெனில், சந்திரகிரகணத்துடன் ரத்த நிலா மற்றும் நீலநிற நிலாவும் தோன்ற உள்ளது.
பாடகர் புருனோ மார்ஸுக்கு 6 கிராமி விருதுகள் : சிறந்த பாடலாக '24 கே மேஜிக்' தேர்வு

  • அமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் வழங்கபட்டன. 
  • இதில் அமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார்.அவர் இசை அமைத்து எழுதி பாடிய '24 மேஜிக்' எனும் பாடல் 2018ம் ஆண்டின் சிறந்த பாடலாகத் தேர்வு பெற்றது. 
  • 32 வயதான மார்க்ஸுக்கு சிறந்த பாடகர், சிறந்த பாடல் ஆசிரியர் விருதும், சிறந்த தொழில்நுட்பக் கலைஞர் உள்ளிட்ட விருதுகள் வழங்கப்பட்டன. 
  • இரண்டா-வதாக 5 கிராமி விருதுகளை கென்ட்ரிக் லாமர் பெற்றார்.
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: பாக்.,கை வீழ்த்தியது இந்தியா
  • ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் அணி படுதோல்வியடைந்தது. 
  • இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் பாக்., இழந்தது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி பைனலுக்கு தகுதி பெற்றது. பிப்.,3 ம் தேதி நடக்கும் பைனலில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி எதிர்கொள்கிறது.
இந்திய ஓபன் குத்துச்சண்டை: சுமித், சர்ஜுபாலாவுக்கு பதக்கம் உறுதி
  • இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்தியர்களான சுமித் சங்வான், சர்ஜுபாலா தேவி ஆகியோர் முறையே தங்களது பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர்.
இன்று- 1910 ஜன., 30
  • சி.சுப்பிரமணியம், கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, செங்குட்டைப்பாளையம் என்ற கிராமத்தில், 1910 ஜன., 30ல் பிறந்தார். சட்டம் பயின்ற இவர், மூதறிஞர் ராஜாஜியின் வழிகாட்டுதலில்,அரசியலும், நிர்வாகமும் பயின்றவர். 
  • கடந்த, 1952 முதல், 1962 வரை, மதராஸ் மாநில அரசில், கல்வி, சட்டம் மற்றும் நிதி அமைச்சராக பணியாற்றினார். 
  • 1962ல் மத்திய அமைச்சரவையில் உருக்கு மற்றும் சுரங்க அமைச்சராக பொறுப்பேற்றார். 1965ல் மத்திய உணவு அமைச்சராக இருந்து பசுமை புரட்சிக்கு வித்திட்டார். 
  • நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட போது, மத்தியில் இந்திரா தலைமையிலான அமைச்சரவையில், நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றியவர். 
  • இந்திய திட்ட கமிஷனின் துணைத் தலைவராகவும் இருந்தவர். 1990ல் மஹாராஷ்டிரா கவர்னராக பொறுப்பேற்றார். 'பாரத ரத்னா' உள்ளிட்ட விருதுகளை பெற்றவர். 2000 நவ., 7ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.