27 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

தமிழகத்திற்கு ஒதுக்குகிறது மத்திய அரசு
  •  சிறுபான்மையினர் மேம்பாட்டிற்காக மத்திய அரசு தமிழகத்திற்கு ரூ.100 கோடி வழங்கியுள்ளது.
பத்ம விருது பெற்றவர்களுக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து
  • சென்னை, பத்ம விருதுகள் பெற்ற இளையராஜா உள்ளிட்டோருக்கு, முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பத்ம விபூஷண் விருது- இளையராஜா
பத்மபூஷன்- ராமச்சந்திர நாகசாமி
பத்மஸ்ரீ விருது- ஞானாம்பாள், விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் 
பத்மஸ்ரீ விருது- ராஜகோபாலன் வாசுதேவன், ரோமுலசு விட்டேக்கர்

இன்று ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம்
  • ஐ.பி.எல்., தொடருக்கான வீரர்கள் ஏலம் இன்றும், நாளையும்(ஜன.,27, 28) பெங்களூருவில் நடக்க உள்ளது.
சையது முஷ்டாக் டி20: தில்லி சாம்பியன்
  • சையது முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தில்லி 41 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிச்சுற்றில் ஃபெடரரை எதிர்கொள்கிறார் சிலிச்
  • ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதியில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரருக்கு எதிரான ஆட்டத்தில், தென் கொரியாவின் ஹியோன் சங் காயம் காரணமாக விலகியதை அடுத்து ஃபெடரர் வென்றதாக அறிவிக்கப்பட்டார்.
  • இதையடுத்து பட்டத்துக்கான போட்டியில் ஃபெடரருடன் பலப்பரீட்சை நடத்துகிறார் குரோஷியாவின் மரின் சிலிச்.
யு-19: காலிறுதியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா
  • பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் இந்தியா 131 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
  •  இதையடுத்து, அரையிறுதியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது.