25 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
திருமணத்தை தடுத்து நிறுத்திய சிறுமிக்கு மாநில அரசு விருது
- 'பெண் குழந்தை தொழிலாளர்; பெண் குழந்தை திருமணங்களை தடுக்கும் வகையில், வீர தீர செயல் புரிந்த, 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு, தேசிய பெண் குழந்தைகள் தினமான, ஜன., 24ல், விருது வழங்கப்படும்' என, 2017 - 18 பட்ஜெட்டில், சமூக நலத்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவைச் சேர்ந்த, 14 வயது சிறுமி நந்தினி, விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
- குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி, தனக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய அந்த சிறுமிக்கு, மாநில அரசு, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டு பத்திரத்தை, முதல்வர் பழனிசாமி வழங்கினார்.
20 பொது துறை வங்கிகளுக்கு நிதி உதவி நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு
- பொதுத் துறை வங்கிகளில், வாராக் கடன் மிகவும் அதிகரித்துள்ளது. 2015 மார்ச்சில், பொதுத் துறை வங்கிகளின் வாராக் கடன், 2.73 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது; இது, 2017, ஜூலையில், 7.33 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது; இதனால், வங்கிகள் நிதி நெருக்கடியில் தத்தளிக்கின்றன.
- இதையடுத்து 'நடப்பு நிதியாண்டில், 20 பொதுத் துறை வங்கிகளுக்கு, 88 ஆயிரத்து, 139 கோடி ரூபாய் பங்கு மூலதனமாக வழங்கப்படும்,''என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்துள்ளார்; இதில்,ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு மட்டும்,10 ஆயிரத்து, 610 கோடி ரூபாய் வழங்கப்பட உள்ளது.
'மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும்'
- மாற்றுத் திறனாளிகள் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பது மற்றும் அதன் அவசியத்தை வலியுறுத்துவது குறித்த மாநாடு, டில்லியில் நேற்று நடந்தது.
- இதில், தலைமை தேர்தல் கமிஷனர் ராவத் பேசியதாவது: :''மாற்றுத் திறனாளிகள், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும்,'' என, தெரிவித்து உள்ளார்.
1, 2ம் வகுப்புகளுக்கு மதிப்பெண் கிடையாது
- ம.பி.,யில், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநில கல்வித் துறையின் கீழுள்ள, ராஜ்ய சிக் ஷா கேந்திரா, துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கல்விக்கான பாடத் திட்டங்களை வகுத்து வருகிறது.
- தேர்வுகளில் மதிப்பெண்கள் வழங்குவதால், குறைந்த மதிப்பெண் பெறும் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், பெற்றோரின் நெருக்குதலுக்கு ஆளாகின்றனர்.
- இதை தவிர்க்கும் வகையில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மதிப்பெண்களுக்கு பதில், 'ஸ்மைலி' படங்கள் மூலம் மதிப்பீடு செய்ய, ராஜ்ய சிக் ஷா கேந்திரா திட்டமிட்டு உள்ளது.
தேசிய கூடைப்பந்து: தமிழக ஆடவர் சாம்பியன்
- 68-ஆவது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் பிரிவில் தமிழக அணி 94-86 என்ற புள்ளிகள் கணக்கில் சர்வீசஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
யு-19: அரையிறுதியில் பாகிஸ்தான்
- பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் தனது காலிறுதி ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலிய ஓபன்: அரையிறுதியில் ஃபெடரர்-ஹியோன் சங் மோதல்
- ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், தென் கொரியாவின் ஹியோன் சங்கும் மோதுகின்றனர்.