23 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

டாவோஸில் இன்று உலக பொருளாதார மாநாடு துவக்கம்
  • ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், உலக பொருளாதார மாநாடு நடக்கிறது. நான்கு நாட்கள் நடைபெறும் மாநாடு இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் டாவோஸ் சென்றுள்ளனர். 
  • இன்று நடக்கும் துவக்க நிகழ்ச்சியில், உலக நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள் மத்தியில், பிரதமர் மோடி சிறப்புரை ஆற்றுகிறார். சர்வதேச பொருளாதார மாநாடு நடைபெறும் பகுதியில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது.
ஆஸ்கர் விருது போட்டி : பிரியங்காவுக்கு கவுரவம்
  • ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் படங்கள், நடிகர் - நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள், விரைவில் அறிவிக்கப்படவுள்ளன.
  • இந்த அறிவிப்பை வெளியிடும் கவுரவம், பிரியங்கா சோப்ராவுக்கு கிடைத்துள்ளது. இதற்கான படப்பிடிப்பு, நேற்று, அமெரிக்காவில் நடந்தது. இதுதொடர்பான புகைப்படத்தை பிரியங்கா சோப்ரா, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
சுவிஸ் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு
  • உலக பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்வதற்காக டேவோஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, சுவிட்சர்லாந்து அதிபர் அலைன் பெர்செட்டை சந்தித்து பேசினார். 
  • இச்சந்திப்பின் இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தலைமை தேர்தல் கமிஷனர் ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவியேற்பு
  • இந்திய தலைமை தேர்தல் கமிஷனராக இருந்த அச்சல் குமார் ஜோதியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் தேர்வு செய்யப்பட்டார். 
  • 22வது தலைமை கமிஷனராக ஓம் பிரகாஷ் ராவத் இன்று பதவியேற்கிறார். அதேபோல் தேர்தல் கமிஷனராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக் லவாசாவும் இன்று பதவியேற்க உள்ளார்.
உயிர் நீத்த வீரர்களுக்கான நிதி ரூ.13 கோடி வசூல்
  • உயிர் நீத்த ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு பொருளாதார உதவி வழங்குவதற்காக, 'பாரத் கே வீர்' என்ற பெயரில், வங்கிக் கணக்கு துவங்கப்பட்ட நிலையில், சமீபத்தில், டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'பாரத் கே வீர்' என்ற பாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், பாடலை பாடிய கைலாஷ் கேர் மற்றும் பலர் பங்கேற்றனர். 
  • அக் ஷய் குமார் பேசுகையில், 'உயிர் நீத்த ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு தானாக முன்வந்து உதவ வேண்டும்' என்றார்.
  • இதைத் தொடர்ந்து, அறிவிப்பு வெளியான ஒரு மணி நேரத்தில், இந்த வங்கி கணக்கில், 12.93 கோடி ரூபாய் நன்கொடையாக சேர்ந்தது.
வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ.9.50 லட்சம் கோடியாக உயரும்
  • இந்திய வங்கித் துறையின் வாராக்கடன் தற்போது, எட்டு லட்சம் கோடி ரூபாயாக உள்ளது; இது, மார்ச் இறுதியில், 9.50 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.
36,000, 11,000 : சென்செக்ஸ், நிப்டி சாதனை
  • இந்திய பங்குச்சந்தைகள் புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளன. 
  • முதன்முதலாக சென்செக்ஸ் 36 ஆயிரம் புள்ளிகளையும், நிப்டி 11 ஆயிரம் புள்ளிகளையும் கடந்தது.
'விளையாடு இந்தியா' போட்டி 3,298 பேர் பங்கேற்கின்றனர்
  •  மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் முதல் முறையாக நடத்தப்படவுள்ள பள்ளிகளுக்கு இடையேயான 'விளையாடு இந்தியா' போட்டியில் 3,298 தடகள வீரர்கள் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இம்மாதம் 31-ஆம் தேதி தொடங்கும் இந்தப் போட்டிகளில், துப்பாக்கி சுடுதலில் ஜூனியர் உலக சாம்பியன் அனிஷ் பன்வாலா, இளையோருக்கான உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற ஜெரிமி லால்ரினுங்கா உள்ளிட்ட பிரபல வீரர்களும் பங்கேற்கின்றனர்.
ஆஸி. ஓபன்: 5 முறை சாம்பியன் வெளியேற்றம்
  •  முன்னணி வீரரும் 5 முறை ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 4-ஆவது சுற்று ஆட்டத்தில் தென் கொரியாவின் சங் ஹியோனை திங்கள்கிழமை எதிர்கொண்டார்.
  • இதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சங் ஹியோன், 6-7 (4-7), 5-7, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
  • இதன்மூலம் 12 கிராண்ட்ஸலாம் பட்டங்களை வென்றுள்ள நோவக் ஜோகோவிச், 6-ஆவது முறையாக ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இன்று.- 1897 ஜனவரி 23
  • நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஒடிசா மாநிலம், கட்டாக் எனும் இடத்தில், 1897 ஜன., 23ல் பிறந்தார். ஐ.சி.எஸ்., தேர்வுக்காக, லண்டன் சென்ற அவர், தன் படிப்பை தொடர்ந்தார். 
  • ஐ.சி.எஸ்., நுழைவுத் தேர்வில், இந்தியாவிலேயே நான்காவதாக தேர்ச்சி பெற்றவர். நாட்டை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரிடம், பணி செய்யக் கூடாது எனக் கருதி, தன் பதவியை லண்டனிலேயே துறந்தார்.நாடு திரும்பிய அவர், இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட துவங்கினார். 
  • இரண்டாம் உலகப் போர் நடந்தபோது, வெளிநாடுகளில் போர் கைதிகளாய் இருந்த நுாற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி, இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கினார். 
  • ஆங்கிலேயருக்கு எதிராக தாக்குதல் நடத்தினார். 1945 ஆக., 18ல் தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்தார். அவர் இறப்பு, இன்று வரை சர்ச்சையாக உள்ளது. அவர் பிறந்த தினம் இன்று.