21 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
நமது அம்மா நாளிதழ், அம்மா டிவி பிப்., 24ல் தொடங்க திட்டம்
- நமது அம்மா நாளிதழ் மற்றும் அம்மா டிவி ஆகிய இரண்டையும் ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளனர்.
சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க ஹரியானா அரசு முடிவு
- ஹரியானா மாநிலத்திலும் சிறுமிகள் பலாத்காரச் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வந்தது. இதுகுறித்து காங்கிரஸ் கேள்வியெழுப்பியிருந்தது.
- இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ஹரியான முதல்வர் மனோகர்லால் கட்டா, 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தை இயற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது என்று கூறினார்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை
- மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான ‘நீட்’ தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் இல்லை என்று மத்திய கல்வி வாரியம் அறிவித்து உள்ளது.
60 மீட்டர் ஓட்டம்: கிறிஸ்டியன் கோல்மேன் உலக சாதனை
- அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் உள்ள கிலெம்சன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் 60 மீட்டர் உள்ளரங்கு ஓட்டத்தில் பங்கேற்ற கோல்மேன், 6.37 நொடிகளில் இலக்கை எட்டி முதலிடம் பிடித்தார்.
- கோல்ட்மேன் பந்தய இலக்கை 6.37 நொடிகளில் அடைந்தது, புதிய உலக சாதனையாகும். முன்னதாக, மற்றொரு அமெரிக்கரான மெüரிஸ் கிரினி 6.39 நொடிகளில் இலக்கை அடைந்ததே சாதனையாக இருந்தது. கிரினி தனது அந்த "பெஸ்ட்' நொடிகளை 2 முறை எட்டியிருந்தார்.
நான்கு நாடுகள் ஹாக்கி: இறுதிச்சுற்றில் இந்தியா-பெல்ஜியம்
- நியூஸிலாந்தில் நடைபெறும் 4 நாடுகள் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது கடைசி ரவுண்ட் ராபின் சுற்றில், நியூஸிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
- ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிச்சுற்றில் பெல்ஜியத்துடன் மோதுகிறது இந்தியா.
பார்வையற்றோர் உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா மீண்டும் சாம்பியன்
- பார்வையற்றோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
- நடப்புச் சாம்பியனாக இருந்த இந்தியா, இந்த வெற்றியின் மூலமாக கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது.