20 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
கனடாவில் அமைச்சர்களான இந்திய வம்சாவளி பெண்கள்
- பஞ்சாபி மொழி ஆதிக்கம் உள்ள, அன்டாரியோவின், பிராம்டன்ஸ்பிரிங்டேல் பார்லி., தொகுதியில் இருந்து, ஹரிந்தர் மால்ஹியும், ஹால்டனில் இருந்து, இந்திரா நாயுடு ஹாரிசும், எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
- சமீபத்தில், ஒன்டாரியோ மாகாண முதல்வர், காத்லீன் வெய்ன் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட போது, இவர்கள் இருவரும் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர்.
- இவர்களில், கனடாவின் முதல் சீக்கிய, எம்.பி.,யின் மகளான, மால்ஹி, பெண்கள் மேம்பாட்டு அமைச்சராகவும், ஹாரிஸ், கல்வி மற்றும் குழந்தைகள் நல அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஆறு ஆண்டுகளுக்கு பின் பஸ் கட்டணம் உயர்வு : இன்று முதல் அமலாகிறது
- தமிழகத்தில், 2011 நவ., 18ல், பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன்பின், கட்டணம் உயர்த்தப்படவில்லை. அண்டை மாநிலங்களோ, பல முறை கட்டணத்தை உயர்த்தின.
- ஏழு ஆண்டுகளில், அரசு போக்குவரத்து கழகங்களின் நிதி நெருக்கடியை சமாளிக்க, தமிழக அரசு, 12 ஆயிரத்து, 59 கோடி ரூபாயை மானியமாக வழங்கி உள்ளது.
- அரசு போக்குவரத்து கழகங்களுக்கு, இதுவரை ஏற்பட்டுள்ள தொடர் நஷ்டம், 20 ஆயிரத்து, 488 கோடி ரூபாய். போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக இயங்கவும், நிதி நெருக்கடியை சமாளிக்கவும், பொதுமக்களுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கவும், அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது.
தேசிய விருது: வாலிபருக்கு பாராட்டு
- ஆதரவற்றோருக்கு நல்வாழ்வு ஏற்படுத்தி, மத்திய அரசின் தேசிய இளைஞர் விருது பெற்ற, நவின்குமாருக்கு, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.
விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
- விமானம் பறக்கும்போது, பயணிகள், மொபைலில் பேசவும், இன்டர்நெட் பயன்படுத்தவும் அனுமதி அளிக்கலாம் என, 'டிராய்' எனப்படும், தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
ஆஸ்திரேலிய கூட்டமைப்பில் இந்தியா இணைந்தது
- சர்வதேச நாடுகளுக்கிடையே ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள், ரசாயன மற்றும் உயிரியல் ஆயுதங்களை உருவாக்கப் பயன்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் ஆஸ்திரேலிய கூட்டமைப்பில் இந்தியா நேற்று(ஜன.,19) முறைப்படி இணைந்தது.
- ஏற்கனவே ஆயுதங்களை உருவாக்க பயன்படும் பொருட்களை ஏற்றுமதி செய்ய கட்டுப்பாடுகளை விதிக்க வகைசெய்யும் வசேனார் மற்றும் எம்.டி.சி.ஆர்., அமைப்பிலும் இந்தியா உறுப்பினராக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தானை 'ஒயிட்வாஷ்' செய்தது நியூஸிலாந்து
- பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் கடைசி ஆட்டத்தில் நியூஸிலாந்து 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் பாகிஸ்தானை 5-0 என ஒயிட்வாஷ் செய்துள்ளது நியூஸிலாந்து.
டேபிள் டென்னிஸ் தரவரிசை: 2-ஆவது இடத்தில் மானவ் தக்கார்
- டேபிள் டென்னிஸுக்கான சர்வதேச தரவரிசையில் ஆடவர் பிரிவில் இந்திய வீரர் மானவ் தக்கார் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- முன்பு 18-ஆவது இடத்தில் இருந்த மானவ் தற்போது 16 இடங்கள் ஏற்றம் கண்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய நீர்வழிக்குகை மெக்சிகோவில் கண்டுபிடிப்பு
- தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நீண்ட வருட ஆராய்சிகளுக்கு பிறகு மாயன் பழங்குடியினர் மக்கள் பயன்படுத்தியதாக கூறப்படும் மிகப்பெரிய நீர்வழிக்குகையை மெக்சிகோவில் கண்டுபிடித்துள்ளனர்.
- இந்த நீர்வழிக்குகை சுமார் 347 கி.மீ தூரம் வரை காணப்படுகிறது.
- இது தான் உலகிலேயே மிகப்பெரிய நீர்வழிக்குகை என்று ஆராய்சியாளர்கள் கருதுகின்றனர்.
- இந்த பகுதியில் மாயன்கள் வாழ்ந்ததை உறுதி செய்யும் வகையில் சிதிலமடைந்த பாண்டங்கள் மற்றும் எலும்புகள் குகைக்கடியில் கண்டறியப்பட்டுள்ளன.