19 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
சீக்கியருக்கு அமெரிக்காவில் முக்கிய பதவி
- அமெரிக்காவின் நியூ ஜெர்சி நீதிமன்றத்தில், சீக்கிய மதத்தை சேர்ந்தவர், முதல் முறையாக, அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, அமெரிக்க வழக்கறிஞரான குர்பீர் எஸ் கிரேவால், 44, நியூ ஜெர்சி மாநில நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரலாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கிரேவாலின் பெயர், அட்டர்னி ஜெனரல் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவரது நியமனத்தை, செனட் நீதித்துறைக் குழு உறுதிப்படுத்தியது.
'அக்னி - 5' ஏவுகணை சோதனை முழு வெற்றி
- அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும், அக்னி ரக ஏவுகணைகள் தயாரிக்கப்படுகின்றன. ஏற்கனவே, அக்னி - 1, 2, 3, 4 ரக ஏவுகணைகள் பயன்பாட்டில் உள்ளன.
- இந்நிலையில், அதிநவீன வசதிகள் உடைய, அக்னி - 5 ரக ஏவுகணையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்து உள்ளது.
- ஏற்கனவே, நான்கு முறை சோதித்து பார்க்கப்பட்ட நிலையில், அக்னி - 5 ஏவுகணையின் ஐந்தாவது சோதனை, நேற்று நடந்தது. ஒடிசாவில் உள்ள, ராணுவ தளத்தில் இருந்து, இந்த ஏவுகணை செலுத்தப்பட்டது.
- அணு ஆயுதத்தை ஏந்தி செல்லக்கூடிய, 5,000 கி.மீ., துாரத்தில் உள்ள இலக்கை தாக்கக் கூடிய இந்த ஏவுகணை சோதனை, முழு வெற்றி அடைந்ததாக, டி.ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
18 பேருக்கு வீரதீர விருது
- உத்தர பிரதேசத்தில், சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க உதவிய, 18 வயது நாசியா உட்பட, 18 பேருக்கு, தேசிய, வீரதீர விருது வழங்கப்பட உள்ளது.
- இந்த ஆண்டு குடியரசு தின விழாவையொட்டி, 18 பேருக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த விருதுகளை வழங்குகிறார். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இந்த விழாவில் பங்கேற்கிறார். 26ம் தேதி நடக்கும் குடியரசு தினவிழா பேரணியிலும் இவர்கள் பங்கேற்பர்.
- இந்த ஆண்டு, ஏழு சிறுமியர், 11 சிறுவர்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
49 வகையான பொருட்களுக்கு ஜி.எஸ்.டி., விகிதம் மாற்றியமைப்பு
- ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில், 29 வகையான கைவினைப் பொருட்களுக்கு, 12 - 18 சதவீதமாக உள்ள வரியை, முழுமையாக நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இதைத் தவிர, 49 வகையான பொருட்கள் மற்றும் 53 வகையான சேவைகளுக்கான வரி விகிதம் மாற்றி அமைக்கப்பட்டுஉள்ளது,என, மத்திய நிதி அமைச்சர், அருண் ஜெட்லி தெரிவித்தார்.
3 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு
- இந்த ஆண்டில், எட்டு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல்கள் நடக்க உள்ளன. அதில், மார்ச்சில் சட்டசபை காலம் முடிவடையும் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்துக்கு, தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது.
- இதன்படி, திரிபுராவில், பிப்., 18ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்தில், பிப்., 27ம் தேதியும் தேர்தல் நடக்க உள்ளது. மார்ச், 3ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடக்க உள்ளது.தலைமை தேர்தல் கமிஷனர், ஏ.கே. சோதி இதை நேற்று அறிவித்தார்.
ஐசிசி விருதுகள்: சிறந்த வீரர், கேப்டன் விருது வென்றார் கோலி
- துபையில் வியாழக்கிழமை ஐசிசி வெளியிட்ட அறிவிப்பின்படி, சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கார்ஃபீல்ட் சோபர்ஸ் கோப்பையை விராட் கோலி கைப்பற்றினார்.
- அத்துடன் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராகவும் தேர்வு செய்யப்பட்ட அவர், 2017-ஆம் ஆண்டுக்கான ஐசிசி டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணிகளுக்கான கேப்டனாகவும் அவர் தேர்வாகியுள்ளார்.
டெஸ்ட் தரவரிசை: 900 புள்ளிகளை எட்டி கோலி சாதனை
- டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 900 புள்ளிகளை எட்டிய 2-ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார்.
- சுனில் காவஸ்கருக்கு அடுத்து இந்த பெருமையை கோலி அடைந்துள்ளார்.
இன்று- 1933 ஜனவரி 19
- சீர்காழி கோவிந்தராஜன், நாகை மாவட்டம், சீர்காழியில், சிவசிதம்பரம் - அவையாம்பாள் தம்பதிக்கு, 1933 ஜன., 19ல், மகனாக பிறந்தார்.
- சென்னை தமிழ் இசை கல்லுாரியில் பயின்ற இவர், 1949ல், இசைமாமணி பட்டமும், 1951ல், சங்கீத வித்வான் பட்டமும் பெற்றார். பத்ம ஸ்ரீ உள்ளிட்ட விருதுகள் பெற்றவர்.
- 1983ல், சென்னை பல்கலைக் கழகம், அவருக்கு, முனைவர் பட்டம் வழங்கியது.
- சென்னை தமிழிசை கல்லுாரியின் முதல்வராக பணியாற்றியவர்.
- திரைப்படத் துறையில், நடிகராகவும், பின்னணி இசை பாடகராகவும் திகழ்ந்தார். 1988 மார்ச், 24ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.