18 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
- ஆறு நாள் சுற்றுப்பயணமாக தற்போது இந்தியா வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெகதாகுவை பிரதமர் மோடி வரவேற்று, உபசரித்து வருகிறார்.
- இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10 ம் தேதி மோடி, பாலஸ்தீனம் செல்ல உள்ளார்.
- பாலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.
மாநில பாடத்திட்ட அடிப்படையில் நீட்தேர்வு கேள்விகள்: மத்திய அரசு
- மாநில அரசின் பாடத்திட்டங்களையும் பரிசீலித்து, நீட்தேர்வு கேள்விகளை தயாரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
- மாநில பாடதிட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
- ஆனால் பல்வேறு பாடத்திட்டங்களை வைத்து கேள்விகள் தயாரிக்கப்பட்டால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 25வது கூட்டம்
- இன்று (ஜன.,18), டில்லியில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி தலைமையில், ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 25வது கூட்டம் நடக்கிறது.
- மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு, இரு வாரங்களே உள்ள நிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ஜி.எஸ்.டி.,யில், ரியல் எஸ்டேட் துறை இணைப்பு, ஒருசில பொருட்களின் வரி குறைப்பு உள்ளிட்ட, முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமை தேர்தல் ஆணையர்களின் சம்பளம் இரு மடங்காக உயர்கிறது!
- தலைமை தேர்தல் ஆணையர்கள் மூன்று பேரின் சம்பளம் இருமடங்காக உயர உள்ளது.
- சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு நீதிபதிகளின் சம்பளத்தை 2 மடங்குக்கு மேல் உயர்த்துவதற்கான மசோதா ஒன்று நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டது.
- மக்களவையில் நிறைவேறிய இந்த மசோதா, மாநிலங்களவையில் வருகிற பட்ஜெட் தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
3 மாநில தேர்தல் தேதி இன்று அறிவிப்பு
- இந்தியாவின் வடமாநிலங்களான மேகாலயா, திரிபுரா மற்றும் நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கான காலம் முடிவடைய உள்ளது.
- இதனை தொடர்ந்து அந்த மாநிலங்களில் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
- இந்த நிலையில், 3 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை இன்று மதியம் 12 மணிக்கு தேர்தல் ஆணையம் அறிவிக்கின்றது.
ஓய்வு பெறுகிறார் ரொனால்டினோ
- கடந்த 2002-ஆம் ஆண்டு பிரேஸில் அணி உலகக் கோப்பை வெல்ல முக்கியக் காரணமாக இருந்த ரொனால்டினோ, பாரீஸ் செயின்ட் ஜெர்மெய்ன், பார்சிலோனா ஆகிய கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.
- எனினும், கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் ஓய்வு பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று- 1996 ஜனவரி 18
- என்.டி.ராமா ராவ், ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம், நிம்மகுரு என்ற கிராமத்தில், 1923 மே, 28ல் பிறந்தார். 200க்கும் மேற்பட்ட தெலுங்கு படங்களிலும், 15 தமிழ் படங்களிலும், ஒருசில ஹிந்தி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.சிறந்த நடிகருக்கான, 'பிலிம் பேர்' விருதை, 10 முறையும், 1968ல், தேசிய விருதும், பத்ம ஸ்ரீ பட்டமும், ஆந்திர பல்கலை சார்பில், 'கவுரவ டாக்டர்' பட்டமும் பெற்றவர்.
- திரைத் துறையில் இருந்து அரசியலுக்கு, 1982ல் நுழைந்தார்; தெலுங்கு தேசம் என்ற கட்சியை துவக்கினார்.
- கடந்த, 1994ல், மூன்றாவது முறை முதல்வராக இருந்த போது, மருமகன், சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடால், கட்சி உடைந்தது.
- 1995-ல், ராமா ராவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபையில் நடந்த ஓட்டெடுப்பில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடு, முதல்வரானார். என்.டி.ராமா ராவ், 1996 ஜன., 18ல் காலமானார். அவர் இறந்த தினம் இன்று.