17 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
கடல்நீரை சுத்திகரிக்கும் ஜீப் மோடிக்கு பரிசளிக்க திட்டம்
- மத்திய கிழக்கு நாடான, இஸ்ரேலின் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாஹு, ஆறு நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ளார். முன்னதாக, பிரதமர் மோடி, 2017ல், இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டார்.அப்போது, மத்திய தரைக் கடலை ஒட்டியுள்ள கடற்கரைக்கு, இரு பிரதமர்களும் சென்றனர்.
- கடல்நீரை சுத்திகரித்துகுடிநீராக்கும், 'கால்மொபைல்' எனப்படும், ஜீப்பில், இருவரும் பயணம் செய்தனர். அந்த ஜீப்பின் செயல்பாடுகள் குறித்து, பிரதமர் மோடி மிகவும் ஆர்வமுடன் கேட்டறிந்தார்.மோடியின் ஆர்வத்தை புரிந்த நெதன்யாஹு, 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அந்த ஜீப்பை, பரிசாக அளிக்க திட்டமிட்டு உள்ளார். குஜராத்தில், இன்று நடக்கும் நிகழ்ச்சியின் போது, அந்தஜீப்பை பரிசாக அளிக்க உள்ளார்.
பிப்ரவரி 24-இல் அதிமுகவின் "நமது அம்மா" நாளிதழ் வெளிவருகிறது
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அதிமுகவின் அதிகாரப்பூர்வ "நமது அம்மா" நாளிதழ் வெளியாக உள்ளது.
எம்ஜிஆர் 101வது பிறந்தநாள்: முதல்வர் பழனிசாமி மலர் தூவி மரியாதை
- முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 101வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
- முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 101-வது பிறந்தநாளையொட்டி, தமிழக அரசின் சார்பில் அவருக்கு மரியாதை செலுத்தப்படுகிறது.
யு-19 உலகக் கோப்பை தொடர்: காலிறுதிக்கு இந்திய அணி தகுதி
- 19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் குரூப் 'பி' பிரிவில் இடம்பெற்றுள்ள பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- குரூப் பிரிவில் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்ற இந்தியா, காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
இன்று- 2010 ஜனவரி 17
- ஜோதிபாசு, மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில், 1914 ஜூலை, 8ல், நிசிகாந்தபாசு - ஹேமலதா தம்பதிக்கு பிறந்தார். பிரிட்டனில் சட்டம் பயின்ற அவர், 1940ல், தாயகம் திரும்பினார். 1944ல், தொழிற்சங்க நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்ட அவர், தொழிலாளர் சங்க பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- இந்திய பொதுவுடைமை கட்சி, 1964ல் பிளவு பட்ட போது, மார்க்சிஸ்ட் கட்சியின், பொலிட் பீரோவின் முதல் ஒன்பது உறுப்பினர்களில் ஒருவராக விளங்கினார்.
- மேற்கு வங்கத்தில், 1967 மற்றும் 1969ல் அமைந்த, ஐக்கிய முன்னணி அரசில், துணை முதல்வராக பொறுப்பேற்றார். 1977 - 2000 வரை, மேற்கு வங்க முதல்வராக தொடர்ந்து பணியாற்றினார்.அவர் இறந்த தினம் இன்று.