16 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
வரும் 18-ஆம் தேதி கூடுகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்
- கட்டுமானத்துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவதில் தில்லி, ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் தீவிரமாக உள்ளன. அண்மையில் நிதியமைச்சக அதிகாரிகளுக்கும் கட்டுமானத் துறையினருக்கும் இடையே நடைபெற்ற கூட்டத்தின் போது கட்டுமானத்துறையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
- இந்நிலையில் நாளை மறுநாள் நடைபெற உள்ள ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் கட்டுமானத் துறையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வருவது குறித்து தீவிரமான விவாதம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
- முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு இன்று வங்காளதேசத்தில் உள்ள சிட்டாகாங் பல்கலைக்கழகத்தில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
யு-19 உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 2-வது வெற்றி!
- 19 வயதுக்குள்பட்டோருக்கான (யு-19) உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பப்புவா நியூ கினியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.