15 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திதார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு
ஆதாரில் முகம் கண்டறியும் வசதி: ஜூலை 1-ல் இருந்து புதிய பாதுகாப்பு வசதியை உதய் இணைக்கிறது
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
- தில்லி விமான நிலையம் வந்துள்ள இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். இன்று அவர் ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திதார்.
இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
- நாடு விடுதலை பெற்ற பின்பு 1949 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ம் தேதி சுதந்திர இந்தியாவின் முதல் லெப்டினன்ட் ஜெனரலாக கே.எம்.கரியப்பா பதவியேற்றார். நமது இந்திய ராணுவத்துக்கு ஒரு இந்தியரே தலைமைப் பொறுப்பேற்ற தினத்தை சிறப்பிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15-ம் தேதி ராணுவ தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- தாய்நாட்டுக்காக ரத்தம் சிந்தி தங்கள் இன்னுயிரை தியாகம் செய்யும் நமது சரித்திர நாயகர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளாகவும் ராணுவ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
- இந்திய ராணுவ தினத்தை முன்னிட்டு ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
- ஆதாரில் அங்கீகாரத்தை உறுதி செய்யும் வகையில் பிரச்னையை சரி செய்வதற்காக முகம் கண்டறியும் தொழில்நுட்பம் ஆதாரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆதாரில் முகம் கண்டறியும் புதிய பாதுகாப்பு வசதி ஜூலை 1-ம் தேதியில் இணைக்கப்படுகிறது.
- கைரேகை அங்கீகாரத்தில் பிரச்சனையை எதிர்க்கொள்ளும் முதியவர்களுக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இந்த வசதி இருக்கும். ஜூலை 1-ம் தேதி முதல் இந்த திட்டமான அமலுக்கு வருகிறது என உதய் தெரிவித்து உள்ளது.
டெஸ்ட்: விராட் கோலி அபார சதம்!
- இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி, தென் ஆப்பிரிக்காவின் செஞ்சுரியன் நகரில் சனிக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
- இரண்டாம் நாளன்று அந்த அணி 335 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- தொடர்ந்த இந்திய அணி 2-ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது.
- கோலி 85, பாண்டியா 11 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.