13 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

ரூ.6,522 கோடி துணை பட்ஜெட்; தாக்கல் செய்தார் பன்னீர்
  • பல்வேறு துறைகளுக்கு, 6,522 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய, 2017 - 18ம் ஆண்டிற்கான, முதல் துணை நிதி நிலை அறிக்கையை, துணை முதல்வர், பன்னீர்செல்வம், நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
தமிழக அரசு விருதுகள் முதல்வர் அறிவிப்பு
திருவள்ளூவர் தின விழாவில், தமிழக அரசின் விருது பெற, தேர்வு செய்யப்பட்டவர்கள் விபரத்தை, முதல்வர் பழனிசாமி, நேற்று வெளியிட்டார். தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றி, பெருமை சேர்த்த, தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழக அரசு சார்பில், விருதுகள் வழங்கப்படுகின்றன.
விருதுகள் விவரம்
  • 2018ம் ஆண்டிற்கான, திருவள்ளூவர் விருது- முனைவர் கோ.பெரியண்ணன் 
  • 2017ம் ஆண்டுக்கான பெரியார் விருது-முன்னாள் அமைச்சர், வளர்மதி
  • அம்பேத்கர் விருது- டாக்டர் ஜார்ஜ்.
  • அண்ணா விருது, சுப்ரமணியன்
  • காமராஜர் விருது- தினகரன்
  •  பாரதியார் விருது- முனைவர் பாலசுப்ரமணியன்
  • பாரதிதாசன் விருது- ஜீவபாரதி
  •  திரு.வி.க., விருது-எழுத்தாளர் பாலகுமாரன்
  • கி.ஆ.பெ.விசுவநாதம் விருது- முனைவர் மருதநாயகம் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன.
வரும் 16 அன்று மாலை, 5:00 மணிக்கு, சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும், திருவள்ளுவர் தின விழாவில், முதல்வர் பழனிசாமி, விருதுகளை வழங்க உள்ளார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும், ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதிச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படும்.

ஒரே நாளில் 14 மசோதா!
  • வீடு, கட்டடங்களில் மாற்றம் செய்வோருக்கு, புதிய கட்டண விதிப்பு; 30 நாட்களுக்குள், தொழில் அனுமதி தருவது உள்ளிட்ட, 14 சட்ட மசோதாக்கள், சட்டசபையில், நேற்று ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டன.
  • மேயர் பதவிக்கு நேரடி தேர்தல், உள்ளாட்சி வார்டுகள் மறுவரையறை உள்ளிட்ட, ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட, 11 மசோதாக்களுடன், தற்போது தாக்கல் செய்யப்பட்ட, மூன்று மசோதாக்களும், நேற்று நிறைவேற்றப்பட்டன.
100வது பயணம் வெற்றி 'இஸ்ரோ' புதிய சாதனை
  • 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் செலுத்திய, 100வது செயற்கைக்கோள் பயணம் வெற்றிகரமாக அமைந்தது.
  • நிலப்பரப்பு மற்றும் போக்குவரத்து திட்டமிடலுக்கு உதவும், 'கார்டோசாட் - 2' உட்பட, மூன்று இந்திய செயற்கைக்கோள்களுடன், பல்வேறு நாடுகளின், 28 செயற்கைக்கோள்களும், இந்த பயணத்தின் போது செலுத்தப்பட்டன.
சவுதியில் முதன்முறையாக பெண்கள் கால்பந்து போட்டி காண அனுமதி
  • சவுதி அரேபியாவில், பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. அவை, ஒவ்வொன்றாக நீக்கப்படுகின்றன. . விளையாட்டு மைதானங்களில் நுழைவதற்கு, பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை, சமீபத்தில் நீக்கப்பட்டது சமீபத்தில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்தது இந்நிலையில் பெண்கள் கால்பந்து போட்டியை காண அனுமதி அளித்தது.
  • நேற்று ஜெட்டாவில் நடந்த உள்ளூர் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை காண பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். எனினும் குடும்பத்தினருடன் சேர்ந்து அமரும் பிரிவில் தான் அவர்கள் அமர வேண்டும் என உத்தரவிடப்பட்டது
  • ஜன., 15இந்திய ராணுவ தினம்
  • ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த போது, ராணுவ தலைமை பொறுப்பை அவர்கள் தான் கவனித்தனர். சுதந்திரம் பெற்ற பின்பும் இது தொடர்ந்தது. இந்நிலையில் 1948 ஜன., 15ல், ராணுவ தலைமை தளபதி பொறுப்பை, ஆங்கிலேயர் ராய் பட்சரிடம் இருந்து, இந்தியாவின் 'கரியப்பா' ஏற்றார். 
  • இந்த வரலாற்று நிகழ்வை கவுரவிக்கும் விதமாகவும், நாட்டுக்காக உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், ஜன., 15ம் தேதி, இந்திய ராணுவ தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
யு-19 உலகக் கோப்பை இன்று தொடக்கம்
  • உலகின் பல நாடுகள் பங்கேற்கும் 19 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-19) கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டி நியூஸிலாந்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
  • முதல் நாளில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே-பப்புவா நியூ கினியா, வங்கதேசம்-நமீபியா, நியூஸிலாந்து- மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் மோதும் குழுப் பிரிவு ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
பிபிஎல்: இறுதிச்சுற்றில் ஹைதராபாத்
  • பிரீமியர் பாட்மிண்டன் லீக் (பிபிஎல்) போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் தில்லி டாஷர்ஸ் அணியை 3-0 என்ற கணக்கில் ஹைதராபாத் ஹன்டர்ஸ் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.