12 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

இன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி., - சி40
  • 'பி.எஸ்.எல்.வி., - சி 40' ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 28 மணிநேர, 'கவுன்ட் - டவுன்' நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.
  •  தற்போது விண்ணில் செலுத்தப்படவுள்ள, 'கார்டோசாட் - 2' செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள்.
'கிரீன் கார்டு' எண்ணிக்கையை உயர்த்தும் மசோதா தாக்கல்
  • அமெரிக்காவில் பணிபுரிவதற்காக, வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு, எச் - 1பி விசா வழங்கப்படுகிறது. இதை இந்தியர்களே அதிகம் பயன்படுத்துகின்றனர். 
  • இவ்வாறு வழங்கப்படும் விசாவுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு அறிவித்து வருகிறது.
  • இந்நிலையில், எச் - 1பி விசாவை குறைக்கும் வகையிலும், அதே நேரத்தில், அமெரிக்க குடியுரிமையை உறுதி செய்யும், 'கிரீன் கார்டு' வழங்குவதை, 45 சதவீதம் உயர்த்தும் வகையிலும் புதிய மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு
  • இந்தியாவின் முதல் பெண் வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 
  • பல்வேறு ஐகோர்ட்டுகளில் நீதிபதியாக பணியாற்றி அந்த அனுபவத்தின் அடிப்படையில் கொலீஜியம் மூலம் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பொறுப்பேற்பர்.
  • இந்நிலையில் முதன்முறையாக பெண் மூத்த வழக்கறிஞரான இந்து மல்ஹோத்ரா,61 சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நேரடியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • 35 ஆண்டுகளுக்கு மேல் வழக்கறிஞராக இருந்து வரும் இந்து மல்ஹோத்ரா, மூத்த வழக்கறிஞர்களான ரோஹின்டன் பாலி நாரிமன், யு.யு. லலித், எல். நாகேஸ்வரராவ் ஆகியோருக்கு ஜூனியராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர்.
கூட்டு பயிற்சிக்காக சென்னை வந்தது ஜப்பான் கப்பல்
  • பிரதமர் மோடி, கடலோர பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி தொடர்பாக அளித்த அறிவுரைகளின்படி, ஜப்பான் நாட்டு கடலோர காவல் படை கப்பலுடன், இந்திய கடலோர காவல் படை, கூட்டு பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட உள்ளது. 
  • சென்னை அருகே, நடுக்கடலில், வரும், 12 முதல், 18 வரை நடக்கும் இந்த ஒத்திகை நிகழ்ச்சிக்கு, 'சாரெக்ஸ் - 18' என, பெயரிடப்பட்டுள்ளது. 
  • அதை முன்னிட்டு, ஜப்பானில் இருந்து, சுகாரு என்ற பெயருடைய கப்பல், நேற்று, சென்னை துறைமுகம் வந்தடைந்தது. அதில், 55 வீரர்கள் உள்ளனர். அவர்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை, சுற்றிப் பார்க்க உள்ளனர்.
'தமிழ்நாடு பொன்விழா' தினம் : பொங்கல் அன்று கொண்டாட்டம்
  •  ''தமிழ்நாடு என்ற பெயரோடு, தமிழகம், 50ம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதை ஒட்டி, ஜன., 14ல், தமிழ்நாடு பொன்விழா ஆண்டு கொண்டாடப்படும்,'' என, முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அரசு பஸ்கள் வழக்கம் போல் இயங்க துவங்கின
  • ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக அரசு பஸ் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
  • இந்நிலையில் அரசு உடனான பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து தொழிற்சங்கங்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதனையடுத்து அரசு பஸ்கள் இன்று ஜன.,12அதிகாலை முதல் வழக்கம் போல் இயங்க துவங்கியது.
மம்தாவுக்கு டாக்டர் பட்டம்
  • மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான, மம்தா பானர்ஜியின் சமூக சேவையை பாராட்டி, கோல்கட்டா பல்கலை கழகம், அவருக்கு, நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

சவுதி அரேபியாவில் 10 ஆயிரம் பெண்கள் கால் டாக்சி ஓட்டுநர்களாக நியமனம்

  • சவுதி அரேபிய மன்னர் சல்மானும் அவரது மகனும் பட்டத்து இளவரசருமான முகமது பின் சல்மானும் பொருளாதார, சமூக சீர்திருத்தங்களை அமல்படுத்தி வருகின்றனர். அந்த நாட்டில் பெண்கள் கார் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடை கடந்த செப்டம்பரில் நீக்கப்பட்டது. அதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • லாரி, பைக் ஓட்டவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என்று சவுதி அரேபிய அரசு டிசம்பரில் அறிவித்தது. 
  • இந்த நடைமுறையும் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
  • இதைத் தொடர்ந்து, அங்குள்ள கால் டாக்சி நிறுவனங்கள், பெண் ஓட்டுநர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. உபெர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்சி நிறுவனங்கள் 10 ஆயிரம் பெண் ஓட்டுநர்களைப் நியமிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. 
இன்று: தேசிய இளைஞர் தின விழா
  • தேசிய இளைஞர் தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக தலைநகர் டில்லி மற்றும் நொய்டாவில் நடைபெற்ற இளைஞர் தினவிழாவை பிரதமர் மோடி வீடியோ கான்பரசிங் முறையில்துவக்கி வைத்தார்.
தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இறுதிச்சுற்றில் சரிதா, சோனியா
  • தேசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் சரிதா தேவி, சோனியா லேதர் ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
மாநில பாட்மிண்டன் போட்டி: கன்னியாகுமரி மாணவி முதலிடம்
  • எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பெரம்பலூரில் நடைபெற்ற மாநில அளவிலான பாட்மிண்டன் போட்டியில் மார்த்தாண்டம் நேசமணி கல்லூரி மாணவி முதலிடம் பெற்றார்.