11 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்


இஸ்ரோ புதிய தலைவராக தமிழகத்தின் சிவன் நியமனம்
  • இஸ்ரோ தலைவராக பொறுப்பு வகித்து வரும், கிரண் குமாரின் பதவி காலம் முடிவுக்கு வருவதை அடுத்து, புதிய தலைவராக, தமிழகத்தைச் சேர்ந்த, பிரபல விஞ்ஞானி, சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இதற்கான உத்தரவை, மத்திய அமைச்சரவை நேற்று பிறப்பித்தது.
"இன்போசிஸ்" நாராயண மூர்த்தியின் மாப்பிள்ளை பிரிட்டன் அமைச்சராக நியமனம்
  • பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் நிறுவனமான, 'இன்போசிஸ்' நிறுவன தலைவரான, நாராயண மூர்த்தியின் மகள், அக் ஷந்தா, ஆக்ஸ்போர்டு பல்கலையில், தன்னுடன் படித்த, ரிஷி சுனாக்கை திருமணம் செய்தார். 
  • சர்வதேச முதலீட்டு நிறுவனத்தை நடத்தி வந்த ரிஷி, 2014ல், அரசியலுக்குள் நுழைந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.கடந்த, 2015ல் நடந்த பார்லிமென்ட் தேர்தலில், நியூயார்க் ஷயர் மாகாணத்தின் ரிச்மாண்டில் இருந்து, எம்.பி.,யாக தேர்வானார். 
  • பிரிட்டன் பிரதமர், தெரசா மேயின் நம்பிக்கைக்கு உரியவரான ரிஷி சுனாக், வீட்டுவசதி, உள்ளாட்சி துறைகளின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
திண்டுக்கல் பேராசிரியருக்கு நெதர்லாந்து அரசு விருது
  • நெதர்லாந்தில் இயங்கும் 'எல்ஸ்வேர் ஜெர்னல்' எனும் அமைப்பு அறிவியல், மருத்துவம், பொறியியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. 
  • இதில் திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி இயந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் செந்தில் குமரன், 'ஆற்றல்' பிரிவில் 65 க்கும் மேற்பட்ட ஆய்வு கட்டுரைகளை மதிப்பீடு செய்தார். 
  • இதனால் 2014 டிசம்பரில் அவரது பணியை பாராட்டி 'எல்ஸ்வேர் ஜெர்னல்' அமைப்பு சர்வதேச மறு ஆய்வாளர் விருதை வழங்கியது.
  • இதை தொடர்ந்து 2017 ல் நெதர்லாந்து அரசாங்கமே 'மிகச்சிறந்த சர்வதேச மறுஆய்வாளர்' விருதை வழங்கியுள்ளது.
பொது நூலக துறைக்கு பொறுப்பு இயக்குனர்
  • நுாலகத் துறையின் பொது இயக்குனர் பதவி, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளது. பள்ளிக் கல்வி துறையில் இயக்குனராக பணியாற்றும் கண்ணப்பன், நுாலகத்துறை இயக்குனர் பொறுப்பை, கூடுதலாக கவனித்தார்.
  • அவர் கடந்த வாரம், மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக மாற்றப்பட்டார். இதையடுத்து, பொது நுாலகத் துறையின் பொறுப்பு இயக்குனராக, அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., இயக்குனராக உள்ள, ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு அடையாள அட்டை : ஆதார் கார்டு போல வழங்கப்படும்
  • மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே அந்தந்த மாநில அரசுகள் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்த அட்டை வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்படுகிறது.
  • இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆதார் கார்டை போல் ஒரே மாதிரியான யுனிக் ஐடி கார்டை வழங்க முடிவு செய்துள்ளது.
  • ஆதார் கார்டில் இடம் பெறும் விவரங்கள் போல், இந்த அடையாள அட்டையிலும் 40 சதவீதத்துக்கு மேல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளியின் பெயர், வயது, முகவரி, ஆதார் எண், ஊனம் தொடர்பான விபரங்கள், குயிக் ரெஸ்பான்ஸ் கோடு இடம் பெற்றிருக்கும்.
தேசிய, சர்வதேச பாய்மர படகுப் போட்டி: வேலூர் மாணவருக்கு தங்கப்பதக்கம்
  • ஆந்திராவில் நடைபெற்ற தேசிய, சர்வதேச அளவிலான பாய்மர படகுப் போட்டியில் வேலூர் மாணவர் தங்கப்பதக்கம் வென்றார். அவருக்கு ஆட்சியர் 
  • எஸ்.ஏ.ராமன் பாராட்டுத் தெரிவித்தார்.
பனிச்சறுக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: வீராங்கனை ஆஞ்சலுக்கு வெண்கலம்
  • சர்வதேச ஸ்கி (பனிச்சறுக்கு) போட்டியின் மகளிர் பிரிவில் இந்தியாவின் ஆஞ்சல் தாக்குர் (21) வெண்கலப் பதக்கம் வென்றார். இது, சர்வதேச பனிச்சறுக்கில் இந்தியாவுக்கான முதல் பதக்கமாகும்.
  • துருக்கியில் நடைபெற்ற இப்போட்டியின் ஸ்லாலம் பந்தயப் பிரிவில் 3-ஆவது இடம் பிடித்து பதக்கம் வென்றுள்ளார் ஆஞ்சல்.
பிஎஃப்ஐ பிரதிநிதியானார் சரிதா தேவி
  • இந்திய குத்துச்சண்டை சம்மேளனத்தின் நிர்வாக கவுன்சிலில், பெண் வீராங்கனைகளுக்கான பிரதிநிதியாக முன்னாள் உலக மற்றும் ஆசிய சாம்பியனான சரிதா தேவி புதன்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
  • ஹரியாணா மாநிலம் ரோத்தக்கில் நடைபெறும் மகளிர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியின்போது இதற்கான தேர்தல் நடத்தப்பட்டது. 
  • இதில் சரிதா தேவியை எதிர்த்து ரயில்வே விளையாட்டு வாரிய வீராங்கனையான சீமா பூனியா மட்டும் போட்டியிட்டார். இந்தத் தேர்தலில் மொத்தம் பதிவான 31 வாக்குகளில் சரிதா தேவி 22 வாக்குகளுடன் வென்றார்.