09 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

இந்திய வம்சாவளி நடிகருக்கு 'கோல்டன் குளோப்' விருது
  • திரைப்படம் மற்றும், 'டிவி' துறைக்கு வழங்கப்படும், 75வது, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், பிவர்லி ஹில்ஸ் பகுதியில் நேற்று நடந்தது.
  • இந்த விழாவில், இந்திய வம்சாவளி நடிகர் அஸிஸ் அன்சாரி, சிறந்த 'டிவி' நடிகருக்கான 'கோல்டன் குளோப்' விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 
சிக்கிம் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமான் நியமனம் மாநில முதல்–மந்திரி அறிவிப்பு
  • சிக்கிம் தலைநகர் காங்டாக்கில் குளிர்கால திருவிழா நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.
  • மாநில முதல்–அமைச்சர் பவன்குமார் சாம்லிங் தலைமையில் நடந்த இந்த விழாவில், சிறப்பு அழைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார்.
  • விழா மேடையில் சிக்கிம் மாநிலத்தின் விளம்பர தூதராக ஏ.ஆர்.ரகுமானை நியமிப்பதற்கு முதல்–மந்திரி விருப்பம் தெரிவித்தார். இதை அவரும் ஏற்றுக்கொண்டார். 
பெண்கள் இரு சக்கர வாகனம் வாங்க மானிய தொகை ரூ.25 ஆயிரமாக உயர்வு கவர்னர் அறிவிப்பு
  • இந்த ஆண்டு தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. 
  • கவர்னர் பன்வாரிலால் புரோகித், விரைவில் தொடங்கப்பட உள்ள, பெண்களுக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உதவித்தொகையின் உச்ச வரம்பு, ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தனது உரையில் தெரிவித்தார்.
10 கேட்சுகள்: விருத்திமான் சாஹா புதிய சாதனை!
  • இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்ஸில் 130 ரன்களுக்குச் சுருண்டது.
  • இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சாஹா புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.
  • 2014-ல் மெல்போர்ன் டெஸ்டில் தோனி 9 டிஸ்மிஸல்கள் எடுத்தார். 8 கேட்சுகள் 1 ஸ்டம்பிங் என அந்த டெஸ்ட் போட்டியில் 9 டிஸ்மிஸல்களை நிகழ்த்தினார் தோனி. அச்சாதனையை சாஹா முறியடித்துள்ளார். கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் 10 கேட்சுகள் பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார் சாஹா.
மிகச் சிறிய தக்காளி - இஸ்ரேல் சாதனை
  • தண்ணீர் வசதி மிக குறைவாக உள்ள இஸ்ரேல், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் விவசாய உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியில் அந்நாடு சிறந்து விளங்குகிறது. குறிப்பாக, காய்கறிகள் மற்றும் பழங்களை நவீன சாகுபடியில் விளைவித்து வருகிறது.
  • இதன் ஒரு பகுதியாக தக்காளியை மிக சிறிய வடிவியில் அந்நாடு ஏற்கனவே உருவாக்கியுள்ளது. செர்ரி தக்காளி என அழைக்கப்படும் இந்த தக்காளி அதிக சிவப்பு நிறத்துடன், சிறியதாக இருக்கும். அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இந்த வகை செர்ரி தக்காளிகள் மிகவும் பிரபலமடைந்து வருகின்றன.
  • இந்நிலையில் இஸ்ரேலைச் சேர்ந்த விவசாய ஆராய்ச்சி நிறுவனமான கேடமாக, இதுவரை இல்லாத அளவு மிகச் சிறிய அளவிலான செர்ரி தக்காளியை உருவாக்கியுள்ளது. தண்ணீர் துளி அளவு கொண்ட இந்த தக்காளி, பார்ப்பதற்கு மிக அழகாகவும், சிவப்பு நிறத்துடனும் காட்சி அளிக்கிறது. இந்த தக்காளிகள் தற்போது அந்நாட்டின் உணவகளில் இடம் பிடிக்கத் தொடங்கியுள்ளன.
இன்று 
  • இந்திய சுதந்திரத்திற்கு அரும்பாடுபட்ட பெரியோர்களில் 'நெல்லை அண்ணா' என்று அன்புடன் அழைக்கப்பட்ட தியாகி சோமயாஜூலுவுக்கு சரித்திரத்தில் ஒரு நிலையான, சிறப்பான இடம் உண்டு.
  •  நெல்லையில் டிசம்பர் 28, 1902ல் பிறந்த சோமயாஜூலுவுக்கு, விடுதலைப் போராட்டம் தொடர்பான ஒரு வழக்கில், சுதந்திர போராட்ட வீரரும், 'கப்பலோட்டிய தமிழன்' என்று பாசத்துடன் அழைக்கப்படுபவரான வ.உ.சிதம்பரனார் (வ.உ.சி.,) வாதாடி விடுதலை பெற்றுத் தந்தார் என்றால் அவரது செயலாற்றல் உணரக்கூடியதே. 
  • 'கர்னல் நீல் சிலை அகற்றிய வீரர்' 'எல்லை வீரர்' என்று புகழ்பட அழைக்கப்பெற்றவர். 
  • 1952 - 1957ல் சென்னை மாகாண சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய சோமயாஜூலுவின் பூத உடல் மறைந்த தினம் இன்று.