07 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
அணு விஞ்ஞானி பால்தேவ் ராஜ் காலமானார்
- புகழ்பெற்ற அணு விஞ்ஞானி பால்தேவ் ராஜ் புனேவில் இன்று காலமானார்.
- பல முக்கிய பதவிகளை வகித்த ராஜ், 2014 ஆம் ஆண்டு முதல், பெங்களூருவில் உள்ள, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடிஸ் (என்ஐஏஎஸ்)ல் பணியாற்றினார்.
- நானோ அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கல்வி ஆகியவற்றில் அவர் கூடுதலான பங்களிப்பு வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா- அமெரிக்கா இருதரப்பு பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை
- இந்தியாவின் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரை இந்திய வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெயசங்கர் வெள்ளிக்கிழமை சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு பிரச்சினைகள், குறித்து விவாதித்தார்.
பாரதிதாசன், பெரியார், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனம்
- பாரதிதாசன் பல்கலைக்கழக துணை வேந்தராக மணிசங்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- அதேபோல் கோவை பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தராக குழந்தைவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- நியமிக்கப்பட்டுள்ள துணைவேந்தர்கள் 3 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள் என ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
7:30 மணிநேரத்தில் புதிய பாலம் கட்டிய ரயில்வேத்துறை!
- இதுகுறித்து வடக்கு மண்டல ரயில்வேத்துறை பொது மேலாளர் விஷ்வேஷ் சௌபே கூறியதாவது:லக்னௌ, சஹாரண்பூர் இடையிலான ரயில் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது. இதில், புண்ட்கி, நாகினா இடையிலான ரயில் பாதை சீரமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
- இங்கு 100 வருடங்கள் பழமையான ரயில்வே பாலம் உள்ளது. எனவே இதை மாற்ற முடிவு செய்தோம். இதையடுத்து 100 மற்றும் 60 டன்கள் எடையை சுமக்கும் கிரேன், ஜேசிபி மற்றும் பொக்லேன் இயந்திரங்களின் உதவியுடன் புதிய ஸ்டீல் பாலம் அமைக்க திட்டமிட்டோம்.
- அவ்வகையில் இந்த புதிய பாலம் 7:30 மணி நேரங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்ட அனைத்து ஊழியர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
- பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான எலினா ஸ்விடோலினா சாம்பியன் ஆனார். இது அவரது 10-ஆவது பட்டமாகும்.
மகாராஷ்டிர ஓபன்: வாகை சூடினார் சைமன்
- மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் பிரான்ஸின் கில்லெஸ் சைமன், தென் ஆப்பிரிக்காவின் கெவின் ஆன்டர்சனை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இது, 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு சைமன் வெல்லும் முதல் பட்டமாகும்.
- இப்போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற இறுதிச்சுற்றில், உலகின் 89-ஆம் நிலை வீரரான சைமன் 7-6(4), 6-2 என்ற செட் கணக்கில் உலகின் 14-ஆம் நிலை வீரரும், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்தவருமான ஆன்டர்சனை வென்று வாகை சூடியுள்ளார்.
ஜூனியர் ஸ்குவாஷ் அரையிறுதியில் 2 இந்தியர்கள்
- இதில் 17 வயதுக்கு உள்பட்டோருக்கான காலிறுதியில் துஷர் சஹானி 11-6, 11-7, 10-12, 11-5 என்ற செட் கணக்கில் சகநாட்டவரான சக்ஷாம் செளதரியை வென்றார். இதையடுத்து சஹானி அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் எகிப்தின் ஒமர் எல் டோர்கியை எதிர்கொள்கிறார்.
- 15 வயதுக்கு உள்பட்டோருக்கான காலிறுதியில் நீல் ஜோஷி 11-9, 10-12, 11-4, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் எகிப்தின் அகமது இஸ்மாயிலை வீழ்த்தினார். எனினும், மற்றொரு இந்தியரான அர்னாப் சரீன் தனது காலிறுதியில் 7-5, 7-11, 5-11, 9-11 என்ற செட் கணக்கில் எகிப்தின் அகமது அலியிடம் வீழ்ந்தார்.
அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டெயின் புது சாதனை
- இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கேப் டௌனில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
- இப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், அதிவேகமாக 100 விக்கெட்டுகள் வீழ்த்தி புது சாதனைப் படைத்துள்ளார்.
- தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் மின்னல் வேகப்பந்துவீச்சாளர் என்று அழைக்கப்பட்ட ஆலன் டொனால்டு சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்தார்.