05 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்
இந்திய பொருளாதார சங்க தலைவராக விசுவநாதன் தேர்வு
- பொருளாதார துறைக்கு ஆலோசனை வழங்குவதற்காக, இந்திய பொருளாதார சங்கம் உருவாக்கப்பட்டது.இந்த சங்கத்தின் தலைவர்களாக முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், அமர்தியாசென், ராவ், மால்கம் ஆதி சேஷய்யா ஆகியோர் இருந்துள்ளனர்.
- சங்கத்தின் மாநாடு, ஆந்திரா மாநிலம், குண்டூரில் உள்ள ஆச்சார்யா நகரில், கடந்த வாரம் நடந்தது.
- இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநாட்டை துவக்கி வைத்தார். அப்போது சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.சங்கத்தின் இந்தாண்டு தலைவராக வி.ஐ.டி., வேந்தர் விசுவநாதன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
சபை முன்னவரானார் துணை முதல்வர், பன்னீர்செல்வம்
- ஜெ., முதல்வராக இருந்த போது, 2011 முதல், 2016 வரை, சட்டசபை முன்னவராக, பன்னீர்செல்வம் செயல்பட்டு வந்தார். ஜெ., மறைவுக்கு பின், அவர் முதல்வரானார். அப்போதும், அவரே முன்னவராக இருந்தார்.
- அணிகள் இணைப்புக்கு பின், பன்னீர்செல்வம், துணை முதல்வரானார். அதன்பின், சட்டசபை கூட்டம், வரும், 8ம் தேதி துவங்க உள்ளது. அதைத் தொடர்ந்து, செங்கோட்டையனிடமிருந்த, முன்னவர் பதவி, மீண்டும் பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியானது.
இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்
- கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கு அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி சென்றார். அவரை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ வரவேற்றார்.
- பின்னர் ஹைபா நகரில் உள்ள ஒல்கா கடற்கரையில், நவீன தொழில்நுட்பத்துடன் சுத்திகரிக்கப்படும் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தை, பிரதமர் மோடி பார்வையிட்டு அந்த தண்ணீரைக் குடித்தார்
- இந்நிலையில் வரும் 14-ம் தேதி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ நான்கு நாள் அரசு முறைபயணமாக இந்தியா வருகிறார். அப்போது பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்திக்கிறார்.
- பின்னர் நவீன தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்திகரித்து தூய்மையான குடிநீராக்கும் நடமாடும் ஜீப் ஒன்றை பிரதமர் மோடிக்கு பரிசாக வழங்க உள்ளார். இந்த ஜீப் ஓரிரு நாட்களில் இந்தியா கொண்டு வரப்பட உள்ளது.
ஏ.டி.எம்.,களில் ரூ.200; ஆர்.பி.ஐ., நடவடிக்கை
- அனைத்து தரப்பு மக்களுக்கும், புதிய, 200 ரூபாய் நோட்டு சென்றடைவதற்காக, வங்கி ஏ.டி.எம்.,களில், 200 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில், இயந்திரங்களை மறு சீரமைப்பு செய்ய, ஆர்.பி.ஐ., உத்தரவிட்டு உள்ளது.
நீதிபதிகள் சம்பள உயர்வு மசோதா நிறைவேறியது
- நீதிபதிகள் சம்பள உயர்வுக்கான மசோதா பார்லி. லோக்சபாவில் நிறைவேறியது.
- மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குறித்து 7-வது சம்பள கமிஷனின் பரிந்துரைகளை மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து அமல்படுத்தியது
மகாராஷ்டிர ஓபன்: அரையிறுதியில் சிலிச், சைமன்
- மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச்-பிரான்ஸின் கில்லெஸ் சைமன் ஆகியோர் அரையிறுதிச் சுற்றில் மோதுகின்றனர்.
- முன்னதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் சிலிச் 6-3, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பியரி ஹியூஜஸ் ஹெர்பர்ட்டை வீழ்த்தினார். அதேபோல் மற்றொரு காலிறுதியில் கில்லெஸ் சைமன் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபர்டோ ஒஜிடா லாராவை வென்றார்.
பிரிஸ்பேன் டென்னிஸ்: காலிறுதியில் டிமிட்ரோவ்
- ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ், பிரிட்டனின் கைல் எட்மன்ட் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.