02 ஜனவரி 2018- நடப்பு நிகழ்வுகள்

ஹார்வர்டு பல்கலையில் உரையாற்றுகிறார் கமல்
  • ஹார்வர்டு பல்கலையில், இந்திய கருத்தரங்கு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன், 15வது ஆண்டு கருத்தரங்கு, பிப்., 10, 11ல் நடக்க உள்ளது.
  • இதில் நடக்கும் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய வர்த்தகத் துறை அமைச்சருமான, சுரேஷ் பிரபு, காங்கிரசைச் சேர்ந்த, பஞ்சாப் முதல்வர், அமரீந்தர் சிங், பிரபல நடிகர் கமல்ஹாசன் பங்கேற்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சி, சவால்கள் குறித்து, அவர்கள் உரையாற்ற உள்ளனர். பார்வையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பர்.
சமையல், 'காஸ்' சிலிண்டர் விலை ரூ.5.50 குறைவு
  • சென்னையில், வீட்டு சமையல், 'காஸ்' சிலிண்டர் விலை, 5.50 ரூபாய் குறைந்துள்ளது.
  • இம்மாதம், மானிய சிலிண்டர் விலை, மாறுதல் இன்றி, 483 ரூபாயாக உள்ளது. மானியம் அல்லாத சிலிண்டர், 750.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
27-வது முறையாக அணுசக்தி நிலையங்களை பரிமாறிக் கொண்டது இந்தியா-பாக்
  • இந்தியா, பாகிஸ்தான் இடையே, கடந்த, 1988-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதியன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படி, கடந்த, 1991 -ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதி , இரு நாடுகளும், தங்களின் அணு மின் நிலையங்கள், அணு சக்தியால் இயங்கும் பிற அமைப்புகள் குறித்த பட்டியலை, பரஸ்பரம் பரிமாறிக் கொள்வது வழக்கம். 
  • ஒவ்வொரு ஆண்டும், ஜன., 1ம் தேதி, இந்தப் பட்டியல், இருநாடுகளின் தூதரகங்கள் வாயிலாக பரஸ்பரம் பரிமாறிக் கொள்ளப்படும். 
  • அந்த வகையில், இந்தாண்டும் (2018) நேற்று, இந்த பட்டியல் பரிமாறப்பட்டது. இதன் மூலம், இரு நாடுகளுக்கும் இடையே மோதல் அல்லது போர் நடைபெறும் போது, அணுசக்தி நிலையங்கள் மற்றும் அணு அமைப்புகள் மீது தாக்குதல் நடைபெறாமல் பாதுகாத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்படுகிறது. 
புதிய வெளியுறவு செயலராக கோகலே நியமனம்
  • வெளியுறவுத் துறைச் செயலராக, எஸ். ஜெய்சங்கர், 2015, ஜன., 29ல் இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார். அவருடைய பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டிருந்தது.
  • இந்த நிலையில், சீனாவுக்கான முன்னாள் துாதரான, ஐ.எப்.எஸ்., எனப்படும், இந்திய வெளியுறவு சேவை மூத்த அதிகாரியான, விஜய் கேசவ் கோகலே, புதிய வெளியுறவுத் துறைச் செயலராக, இரண்டாண்டுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் வெளியுறவுத் துறையின் பொருளாதார உறவுகளுக்கான செயலராக உள்ளார்.
முத்தலாக்: இன்று ராஜ்யசபாவில் நிறைவேறுமா
  • பார்லி.யில் கடந்த டிசம்பர் 27-ம் தேதி நடந்த விவாதத்துக்கு பின், முத்தலாக் மசோதா, குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. 
  • இந்நிலையில் இந்த மசோதா, இன்று ராஜ்யசபாவில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதிலும் வெற்றிகரமாக நிறைவேறினால், ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஒப்புதல் கிடைத்தும், சட்டம் அமலுக்கு வரும்.
மகாராஷ்டிர ஓபன்: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ராம்குமார் - சிலிச்சுடன் பலப்பரீட்சை
  • மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன் தனது முதல் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். 
  • அதில் அவர், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொள்கிறார்.
தேசிய துப்பாக்கி சுடும் போட்டி: மானு, மெஹுலி சிறப்பிடம்
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஹரியாணாவின் மானு பேகர், மேற்கு வங்கத்தின் மெஹுலி கோஷ் சிறந்தவர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
  •  இதில் மகளிர் பிஸ்டல் பிரிவில் மானு பேகர் 11 தங்கம், 3 வெள்ளி, ஒரு வெண்கலம் என 15 பதக்கங்கள் வென்றார். மெஹுலி கோஷ் ரைஃபிள் சுடுதல் பிரிவில் 8 தங்கம், 3 வெண்கலம் என 11 பதக்கங்கள் கைப்பற்றினார். ஒட்டுமொத்த சாம்பியனாக ஹரியாணா மாநிலம் தேர்வானது.
பிரிஸ்பேன் டென்னிஸ்: நவாரோவாவை வீழ்த்தினார் ஸ்விடோலினா
  • பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
  •  முன்னதாக, மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஒன்றில் ஸ்பெயினின் கார்லா சுவாரெஸ் நவாரோவை எதிர்கொண்டார் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் இருக்கும் ஸ்விடோலினா. இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஸ்விடோலினா, அதனை எளிதாக தன் வசப்படுத்தினார்.
ரஞ்சி கோப்பை: முதல் முறையாக விதர்பா சாம்பியன்: தில்லியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
  • ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் விதர்பா அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தில்லி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது. 
  • இதன்மூலமாக 7 முறை சாம்பியனான தில்லியை வென்று தனது முதல் ரஞ்சி கோப்பையை முத்தமிட்டுள்ளது விதர்பா.