விண்வெளி தகவல்கள்

  1. நாம் வாழும் அண்டவெளி, பால்வீதி (Milkyway).
  2. நட்சத்திரக் கூட்டங்களின் தொகுப்பு அண்டவெளி (Galaxy).
  3. நாம் வாழும் பிரபஞ்சத்தில் சூரியன் உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன.
  4. சூரியனும் 9 கோள்களும் பால்வீதியில் அமைந்துள்ளன.
  5. மிகப்பிரகாசமான நட்சத்திரம் ஸிரியஸ் (Cirius).
  6. நட்சத்திரங்களுக்கு இடையேயுள்ள தொலைவைக் குறிப்பிட பார்செக் (Parsec) என்ற அலகு பயன்படுகிறது.
  7. விண்வெளி சென்ற முதல் விண்கலம் ஸ்புட்னிக்-1.
  8. ஸ்புட்னிக், 1957-ஆம் ஆண்டு அக்டோபர் 4-ம் தேதி ரஷ்யாவிலிருந்து அனுப்பட்டது.
  9. ஸ்புட்னிக் என்றால் ‘அந்நியன்’ என்று பொருள்.
  10. ஒரு பார்செக் = 3.26 ஒளி ஆண்டுகள்.
  11. ஓர் ஒளி ஆண்டு = சூரிய ஒளி விநாடிக்கு 3x108 என்ற வேகத்தில் ஓராண்டில் கடக்கும் தொலைவு.
  12. ஓர் ஒளி ஆண்டு = 9.43 லட்சம் கோடி கிலோ மீட்டர்.
  13. சூரிய ஒளி பூமியை அடைய 8.2 ஒளி நிமிடங்கள் ஆகின்றன.
  14. நட்சத்திரங்களின் வெப்பநிலையை அவற்றின் நிறத்தை கொண்டு அறியலாம்.
  15. விண்வெளிக்குச் சென்ற முதல் அமெரிக்க விண்கலம் எக்ஸ்ப்ளோரர்-1.
  16. முதன்முதலாக சந்திரனின் மறுபக்கத்தைப் படம் பிடித்த ரஷ்ய விண்கலம் லூனா 2.
  17. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் யூரி ககாரின்.
  18. மனிதனோடு சென்ற முதல் விண்கலம் வாஸ்டாக்மி.
  19. வாஸ்டாக் என்ற ரஷ்ய வார்த்தைக்கு கிழக்கு என்று பொருள்.
  20. ரஷ்ய விண்வெளி வீரர்களை ‘காஸ்மோனாட்’ என்கிறோம்.
  21. அமெரிக்க விண்வெளி வீரர்கள்: அஸ்ட்ரோனாட்.
  22. முதல் இந்திய செயற்கைக்கோள் ஆரியபட்டா.
  23. விண்வெளிக்கு சென்ற முதல் பெண்மணி வாலன்டினா தெரஸ்கோவா.
  24. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா.
  25. இந்தியாவின் முதல் விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா.
  26. கல்பனா சாவ்லா மறைவுக்குக் காரணமானது கொலம்பியா விண்கல விபத்து.
  27. விண்வெளிக்கு சென்ற முதல் விலங்கு லைக்கா Lyca என்ற நாய்.