Skip to main content
அரசியலமைப்பு ஒரு அலசல்
- இந்திய அரசியல் நிர்ணய சபை தோற்றுவிக்கப்பட்ட நாள் - டிசம்பர் 6, 1946
- அரசியமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த பகுதிகளின் எண்ணிக்கை - 22
- அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது அதில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - எட்டு
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - தில்லி
- அரசியல் நிர்ணய சபை எந்தத் திட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்டது - காபினெட் தூதுக்குழுத் திட்டம்
- அரசியலமைப்பு எழுது வரைவுக்குழுவின் தலைவராக செயல்பட்டவர் - டாக்டர் அம்பேத்கார்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் கூடிய நாள் - டிசம்பர் 9, 1946
- இந்திய அரசியலமைப்பு பொதுவாக எந்த நாட்டு அரசியமைப்பை ஒத்துள்ளது - இங்கிலாந்து
- இந்திய அரசியலமைப்பு எந்தச் சட்டத்தின் மறுவடிவமாக திகழ்கிறது - 1935ம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்
- அரசியல் நிர்ணய சபையின் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் ராஜேந்திர பிரசாத்
- இந்திய அரயல் நிர்ணய சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் சச்சிதானந்த சின்கா
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் நிரந்தரத் தலைவராகப் பணியாற்றியவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
- இந்திய அரசியல் நிர்ணய சபையின் ஆரம்ப கால மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை - 385 + 4
- சுதந்திரத்திற்குப் பிறகு இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை - 299
- தற்போதைய அரசியலமைப்பில் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை - 24
- இந்திய அரசியல் நிர்ணய சபை முழு இறைமை பெற்ற அமைப்பாக மாறிய நாள் - ஆகஸ்ட் 15, 1947
- அரசியலமைப்புக்கான முகவுரையை நிர்ணய சபையில் அறிமுகப்படுத்தியவர் - ஜவகர்லால் நேரு
- இந்தியா சுதந்திரம் பெறும்போது அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்தவர் - டாக்டர் இராஜேந்திர பிரசாத்
- இந்திய அரசியலமைப்பின் திறவுகோல் என்று கருதப்படும் அம்சம் - முகவுரை
- இந்திய அரசிலமைப்பு எழுதி முடிக்கப்பட்ட எடுத்துக் கொள்ளப்பட்ட காலம் - 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள்
- முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தைகள் - சோஷலிச, சமயசார்பற்ற, ஒருமைப்பாடு
- அரசியலமைப்பு உருவாக்கப்பட்டபோது அரசியலமைப்பில் இருந்த ஷரத்துக்களின் எண்ணிக்கை - 395
- தற்போதைய அரசியலமைப்பில் உள்ள ஷரத்துக்களின் எண்ணிக்கை - 450
- தற்போதைய அரசியலமைப்பில் இருந்த அட்டவணைகளின் எண்ணிக்கை - 12
- அரசியமைப்பின் இதயமாகவும், ஆன்மைகவும் உள்ள பகுதி என்று டாகடர் அம்பேத்கரால் வர்ணிக்கப்பட்ட பகுதி - அரசியலமைப்பு தீர்வு உரிமைகள் (ஷரத்து 32)
- உலகில் மிக நீண்ட எழுதப்பட்ட அரசியலமைப்பு - இந்திய அரசியலமைப்பு
- தற்போது நமது அரசியமைப்பில் உள்ள இணைக்கப்பட்ட பட்டியல்களின் எண்ணிக்கை - 10
- அடிப்படை கடமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
- அடிப்படை உரிமைகள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
- இந்திய அரசிலமைப்புக்கான எண்ணத்தை அளித்தவர் - எம்.என்.ராய்
- இந்திய அரசிலமைப்பு நடைமுறைக்கு வந்த நாள் - ஜனவரி 26, 1950
- இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட நாள் - நவம்பர் 26, 1949
- இந்திய அரசியலமைப்பின்படி இந்தியாவின் பெயர் - பாரத்
- திருத்தங்கள் என்னும் பகுதி எந்த நாட்டு அரசியமைப்பிலிருந்து பெறப்பட்டது - தென் அமெரிக்கா
- சட்டத்தின்படி ஆட்சி என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
- கூட்டாட்சி என்னும் கருத்துப் படிவத்தை எந்த நாட்டிலிருந்து இந்திய அரசியலமைப்பு பெற்றுள்ளது - கனடா
- பொருளாதார நீதி என்னும் சொல் காணப்படும் இடம் - முகவுரை மற்றும் அரசு வழிகாட்டு நெறிமுறைக் கோட்பாடுகள்
- அரசியல் நிர்ணய சபையின் ஆலோசகராகப் பணியாற்றியவர் - பி.என்.ராவ்
- கொள்கைகள் தீர்மானம் அரசியல் நிர்ணய சபையில் நிர்ணயிக்கப்பட்ட நாள் - ஜனவரி 22, 1947
- கொள்கைகள் தீர்மானத்தை உருவாக்கியவர் - ஜவகர்லால் நேரு
- ஒற்றைக் குடியுரிமை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து
- ஐந்தாண்டுத் திட்டங்கள் என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - ரஷ்யா
- முகவுரை பகுதி திருத்தப்பட்ட ஆண்டு - 1976 (42வது திருத்தம்)
- உச்சநீதிமன்ற நீதிபதிகளை நீக்கும் முறை எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
- முகவுரை என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - அமெரிக்கா
- அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பு என்னும் கருத்துப்படிவம் எந்த நாட்டு அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டது - இங்கிலாந்து