30 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

இந்திய வம்சாவளி கவுன்சிலருக்கு பிரிட்டன் ராணி பாராட்டு
  • பிரிட்டன் தலைநகர் லண்டனில் வசிப்பவர், ரஞ்சித் தீர், 75. இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். 
  • இவர், லண்டனின், ஈலிங் மாவட்டத்தில், 1982ம் ஆண்டில், முதல் முறையாக கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின், நடந்த எட்டு உள்ளாட்சி தேர்தல்களிலும், அவர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், பல கமிட்டிகள், பள்ளி வாரியங்கள் மற்றும் பொது அமைப்புகளின் தலைவராக  துணை மேயர் மற்றும் மேயராகவும் அவர் பணியாற்றியுள்ளார் 
  • அரசுக்கு சிறப்பாக சேவை செய்து வருவதாக, ரஞ்சித் தீரை பாராட்டி, பிரிட்டன் ராணி, இரண்டாவது எலிசபெத், விருது வழங்கி கவுரவித்துள்ளார்.
பாம்பன் கலங்கரை விளக்கிற்கு '172 வயது'
  • 172 ஆண்டுகளை கடந்து பாம்பன் கடற்கரையில் கம்பீரமாக நிற்கும் 'கலங்கரை விளக்கை' சுற்றி பார்க்க மத்திய அரசு, சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

பெண் குழந்தை இறப்பு விகிதம் குறைவு : கவர்னர் பன்வாரிலால் புரோஹித்
  • மத்திய தகவல் ஒலிபரப்பு துறையின், பாடல் மற்றும் நாடக பிராந்திய பிரிவு சார்பில், 'பெண் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி திட்டம்' என்ற நிகழ்ச்சி, நேற்று முன்தினம் மாலை, கவர்னர் மாளிகையில் நடைபெற்றது.
  • இந்நிகழ்ச்சியில், தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், தலைமை தாங்கி பேசியதாவது: பிறக்கும்போது, பெண் குழந்தைகள் இறப்பது குறைந்துள்ளது. 1,000 குழந்தைகளுக்கு, 144 பெண் குழந்தைகள் மரணம் என்ற நிலை மாறி, தற்போது, 43 என்ற அளவிற்கு குறைந்துள்ளது என  பேசினார்.
  • ஜன. 4ல் சி.எம்.டி.ஏ., குழும கூட்டம்
  • சி.எம்.டி.ஏ.,வின் புதிய திட்டங்கள், நிர்வாக செயல்பாடுகள் குறித்து விவாதிக்க, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, குழும கூட்டம் நடத்தப்பட வேண்டும். இதன்படி, நவ., மாதத்தில், குழும கூட்டம் நடத்தப்பட்டது. 
  • இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட, பெரும்பாலான முடிவுகள், இன்னும் அமலுக்கு வராத நிலையில், ஜன., 4ல், அடுத்த கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களில் 'ஜெனரிக்' மருந்துகள்: மத்திய அரசு திட்டம்
  • பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, அனைத்து பெட்ரோல் பங்க்குகள் மற்றும் ரயில் நிலையங்களில், 'ஜெனரிக்' மருந்து விற்பனை நிலையங்களை அமைக்க, மத்திய சுகாதார துறை அமைச்சகம் முடிவு செய்தது. 
  • நாடு முழுவதும், 57 ஆயிரம் பெட்ரோல் பங்க்குகளும், 8,500 ரயில் நிலையங்களும் உள்ளன. இவற்றில், ஜெனரிக் மருந்துகளை விற்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும், 70 ஆயிரம் ஜெனரிக் மருந்து கடைகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிராம பஞ்சாயத்துகளுக்கு 'இன்டர்நெட்' வசதி
  • லோக்சபாவில், மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், மனோஜ் சின்ஹா, எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: இந்தாண்டில், டிச., 24 நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள, 1.08 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில், 2.52 லட்சம் கி.மீ., நீள ஆப்டிக்கல் பைபர் கேபிள் பதியப்பட்டுள்ளது.
  •  இதன் மூலம், 96,039 கிராம பஞ்சாயத்துகளுக்கு, 'பிராட்பேண்ட்' வசதி தரப்பட்டுள்ளது. 
  • நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளுக்கும், 2019, மார்ச் மாதத்துக்குள்,இன்டர்நெட் வசதி அளிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. 
  • அதன்படி, மீதமுள்ள, 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளுக்கு, 4,066 கோடி ரூபாயில், இன்டர்நெட் வசதி அளிக்கப்பட உள்ளது. இதற்கான டெண்டர் பணிகள் முடிந்துள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
திவால் மசோதா நிறைவேறியது
  • திவாலானவர்களாக அறிவிக்கக் கோரும் நிறுவனங்களின் சொத்துக்களை அந்த நிறுவனத்தின் உரிமையாளர்கள் வாங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • இந்த அவசரசட்டத்துக்கான மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.
ராஜ்யசபாவுக்கு ஜன.,1ல் விடுமுறை
  • ஆங்கில புத்தாண்டையொட்டி ஜன.,1ம் தேதி ராஜ்யசபாவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பார்லி., விவகாரங்கள் துறை இணையமைச்சர் விஜய் கோயல் அறிவித்தார். 
  • மேலும் அன்றைய தின அலுவல்களுக்கு பதிலாக அடுத்து வரும் நாட்களில் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
துப்பாக்கி சுடுதல்: ஜிது ராய்க்கு தங்கம்
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய ராணுவ வீரரான ஜிது ராய் புதிய தேசிய சாதனையுடன் தங்கம் வென்றார்.
  • இறுதிச்சுற்றில் ஜிது ராய் மொத்தம் 233 புள்ளிகள் பெற்றார். இந்தப் பிரிவுக்கான இறுதிச்சுற்றில் தேசிய அளவில் இது அதிகபட்சமாகும். அவருக்கு அடுத்தபடியாக கடற்படை வீரர் ஓம்கார் சிங் 222.4 புள்ளிகளுடன் வெள்ளியும், மற்றொரு ராணுவ வீரரான ஜெய் சிங் 198.4 புள்ளிகளுடன் வெண்களமும் வென்றனர்.
மல்யுத்தம்: காமன்வெல்த் போட்டிக்கு சுஷில் குமார் தகுதி
  • இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் உள்ளிட்ட 6 பேர், ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க தேர்வாகியுள்ளனர்.
  • இதற்கான தேர்வுப் போட்டிகள் தில்லி இந்திரா காந்தி விளையாட்டரங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
  • இதில் சுஷில் குமார் (74 கிலோ பிரிவு), ராகுல் அவாரே (57 கிலோ), பஜ்ரங் (65 கிலோ), சோம்வீர் (86 கிலோ), மெளசம் கத்ரி (97 கிலோ), சுமித் (125 கிலோ) ஆகியோர் ஃப்ரீஸ்டைல் பிரிவில் போட்டியிட தகுதிபெற்றுள்ளனர். இந்த 6 பேரும் அடுத்த ஆண்டு கைர்ஜிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.