22 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
ஜெருசலேம் விவகாரம்: ஐ.நா.,வில் டிரம்பிற்கு எதிராக இந்தியா ஓட்டளிப்பு
- ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.
- டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா., சபையில் இன்று பொது வாக்கெடுப்பு நடந்தது. இதில் இந்தியா உள்ளிட்ட 128 நாடுகள் அமெரிக்காவிற்கு எதிராக ஓட்டளித்தன.
- ஐ.நா.வுக்கு எதிராகவும், டிரம்ப்பிற்கு ஆதரவாகவும் 9 நாடுகள் மட்டுமே ஒட்டளித்தன. 35 நாடுகள் ஒட்டளிப்பில் பங்கேற்காமல் புறக்கணித்தன.
ஆர்.கே.நகரில் 78 சதவீதம் ஓட்டுப்பதிவு
- சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 78 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன.
- ஜெ., போட்டியிட்ட போது, பதிவான ஓட்டுகளை விட,கூடுதலாக, 5 சதவீதம் பதிவாகி உள்ளது.
இன்குலாப்பிற்கு சாகித்ய அகாடமி விருது யூமா வாசுகிக்கு மொழி பெயர்ப்பு விருது
- இந்திய அளவில், இலக்கியத்திற்கான சிறந்த கவுரவமாக, சாகித்ய அகாடமி விருது கருதப்படுகிறது.
- இந்தியாவில் உள்ள, 24 மொழிகளிலும் சிறந்த படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டு, ஆண்டுதோறும் விருதும், ஒரு லட்சம் ரூபாய் பரிசும் வழங்கப்படுகிறது.
- 'காந்தள் நாட்கள்' கவிதை தொகுதிக்காக, மறைந்த எழுத்தாளர், இன்குலாப், மொழிபெயர்ப்பு நாவலுக்காக, யூமா வாசுகி ஆகியோர், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
'செல்பி'க்கு தடை: உ.பி.,யில் அதிரடி
- உ.பி.,யில், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில், முதல்வர் மற்றும், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்பு கருதி, அவர்கள் வசிக்கும் பகுதிகளில், பொதுமக்கள், 'செல்பி' எடுக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
- முதல்வரின் வீட்டிற்கு செல்லும் தெருமுனையில், இது குறித்த எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புக்கு பின், அந்த பலகை மட்டும் அகற்றப்பட்டு உள்ளது.
துப்பாக்கி சுடுதல்: சுஷிலுக்கு தங்கம்
- தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவருக்கான 50 மீட்டர் ரைஃபிள் புரோன் பிரிவில் ராணுவ அணி வீரர் சுஷில் காலே தங்கப் பதக்கம் வென்றார்.
- முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் காலே 249.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். தேசிய அளவிலான இறுதிச்சுற்றில் இது அதிகபட்ச புள்ளியாகும். இப்பிரிவில் ஏர் இந்தியா வீரர் ககன் நரங் 246.6 புள்ளிகளுடன் வெள்ளியும், ரியோ ஒலிம்பிக் பங்கேற்பாளரான செயின் சிங் 225.4 புள்ளிகளுடன் வெண்கலமும் வென்றனர்.
இந்தியாவில் முதல் முறை: ஹாக்கி வீராங்கனைகளுக்கு நியூரோ டிராக்கர் பயிற்சி
- இந்திய ஹாக்கி வீராங்கனைகளின் மனோபலத்தை அதிகரிக்கும் வகையில், அவர்களுக்கு 'நியூரோ டிராக்கர்' என்ற தொழில்நுட்ப முறையிலான பயிற்சி அளிக்கப்படுகிறது.
- 2018-ஆம் ஆண்டில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, ஆசிய விளையாட்டுப் போட்டி, உலகக் கோப்பை ஹாக்கி போட்டி நடைபெறவுள்ள நிலையில், இந்திய வீராங்கனைகளுக்கு கடந்த 2 மாதங்களாக இப்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
ரஞ்சி கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் தில்லி-விதர்பா மோதல்
- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதியில் கர்நாடகத்தை எதிர்கொண்ட விதர்பா, 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதையடுத்து வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி ஆட்டத்தில் தில்லியுடன் மோதுகிறது அந்த அணி.
ஃபிஃபா தரவரிசை 105-இல் நீடிக்கும் இந்தியா
- ஃபிஃபா சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்தியா 105-ஆவது இடத்தில் நீடித்து 2017-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது.
- தரவரிசை காலகட்டத்தில் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் விளையாடாத நிலையில் 320 புள்ளிகளுடன் கடந்த மாதம் முதல் அதே இடத்தில் நிலைக்கிறது இந்தியா.
- தரவரிசை பட்டியலில் ஆசிய நாடுகளின் வரிசையில் இந்தியா 15-ஆவது இடத்தில் உள்ளது.
மேற்கு இந்தியா ஸ்குவாஷ் தமிழகத்தின் அபராஜிதா சாம்பியன்
- மேற்கு இந்தியா ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த அபராஜிதா பாலமுருகன் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.
- ஆடவர் பிரிவில் மகாராஷ்டிரத்தின் ஆதித்யா ஜகதாப் பட்டம் வென்றார்.
இன்று
1929 டிசம்பர் 22
- எழுத்தாளர் சிலம்பொலி செல்லப்பன், நாமக்கல் மாவட்டம், சிவியாம் பாளையம் எனும் ஊரில், 1929 டிச., 22ல் பிறந்தார்.
- கணித ஆசிரியர், உலகத் தமிழ் மாநாட்டு உதவி அலுவலர், தமிழ் வளர்ச்சி இயக்குனர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குனர் என, பல பணிகளை ஆற்றியவர்.
- சிறந்த பேச்சாளர்.பெருங்கதை ஆராய்ச்சி, சங்க இலக்கியத் தேன் முதலிய பல நுால்களை, சிலம்பொலி செல்லப்பன் எழுதி உள்ளார்.
- தமிழக அரசின் பாவேந்தர் பாரதிதாசன் விருது பெற்றிருக்கும் இவர் எழுதிய, 'சிலம்பொலியாரின் அணிந்துரைகள்' எனும் நுால், தமிழ் வளர்ச்சித் துறையின், 2006ம் ஆண்டுக்கான சிறந்த நுால்களில் திறனாய்வு எனும் வகைப்பாட்டில், பரிசு பெற்று இருக்கிறது.
- இலங்கையின் கொழும்பு கம்பன் கழகம் சார்பில், 2013ல் கம்பன் புகழ் விருது வழங்கப்பட்டது. இவர் பிறந்த தினம், இன்று.