21 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
ஜெருசலேம் விவகாரம்; இன்று ஐ.நா.வில் பொது வாக்கெடுப்பு
- ஜெருசலேம் நகரை, இஸ்ரேல் நாட்டின் அதிகாரப்பூர்வ தலைநகராக அங்கீகரிப்பதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்திருந்தார்.
- இந்நிலையில் ஜெருசலேம் விவகாரத்தில் டிரம்ப் முடிவை திரும்பப்பெற வேண்டும் என்ற தீர்மானத்தில் ஐ.நா.வில் இன்று பொது வாக்கெடுப்பு நடக்க உள்ளது.
மின் இணைப்பு துண்டிப்பு விபரம் : எஸ்.எம்.எஸ்.,சில் தகவல் தர முடிவு
- மின் கட்டணம் செலுத்தாத வீடுகளில், மின் ஊழியர்கள், முறைகேடாக பணம் வசூலிப்பதை தடுக்க, அந்த விபரத்தை, எஸ்.எம்.எஸ்., வாயிலாக தெரிவிப்பது குறித்து, மின் வாரியம் ஆலோசித்து வருகிறது.
8ம் வகுப்பு வரை கணினி வழி தேர்வு : அரசு பள்ளிகளில் அறிமுகம்
- அரசு பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கணினி வழி தேர்வு மற்றும் மதிப்பீடு முறை அறிமுகமாகிறது.
- தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், கணினி வழியில் தேர்வும், மதிப்பீடும் நடத்தப்பட உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில், எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகம் இறங்கிஉள்ளது.
கோடீஸ்வரர்கள் 23 சதவீதம் உயர்வு
- முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், கடந்த, 2015 - 16ம் ஆண்டில், கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை, 23.5 சதவீதம் உயர்ந்திருந்தது என, வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
இன்று முத்தலாக் தடை சட்ட மசோதா?
- பார்லியில் இன்று முத்தலாக் தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
- நடப்பு கூட்டத் தொடரிலேயே இந்த சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு எதிரான முதல் டி20: இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
- இலங்கைக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை வகிக்கிறது.