புதிய உலக சாதனை நிகழ்த்தியது இஸ்ரோ
பிஎஸ்எல்வி சி-37 ராக்கெட் மூலம் ஒரே நேரத்தில் 104 செயற்கைக்கோள் களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது ‘இஸ்ரோ’. இதுவரை அதிகபட்சம் 37 செயற் கைக்கோள்களை ரஷ்யா ஏவியதுதான் உலக சாதனையாக இருந்து வந்தது.
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என கண்டறிய புதிய தொழில் நுட்பம்
17-06-2017
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப் போகிறார் என்பதை கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence - AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டு பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதை கணக்கிட்டு கூறுகிறது.
தானாகவே இசையமைக்கும் ரோபோ கண்டுபிடிப்பு!
அட்லாண்டா, ஜூன் 19 உலகி லேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தானாகவே இசையமைக்கும் ரோபோவை அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
அமெரிக்காவின் அட்லாண் டா நகரிலுள்ள ஜார்ஜியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ‘ஷிமோன்’ என்று பெயரி டப்பட்ட ரோபோவை உரு வாக்குவதற்கு கடந்த 7 ஆண்டுகளாக உழைத்தனர். செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி தானாகவே இசை யமைக்கும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டது. பீத்தோவன் முதல் பீட்டில்ஸ் வரை மற்றும் லேடி காகா முதல் மைல்ஸ் டேவிஸ் வரை பல்வேறு மேதைகளும், பிரபலங்களும் இசையமைத்த சுமார் 5,000 பாடல்கள் மூலம்ஷிமோனுக்குபயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சாமான்யர்களின் இசையும் பயிற்சியின்போதுபயன் படுத் தப்பட்டது. இதன் மூலம் 4 கரங்களையும், 8மரக்குச்சிகளையும்உடைய ஷிமான், ‘மரிம்பா’ (கம்பி களால் இணைக்கப்பட்ட மெல்லிய மரக் கட்டைகளை தட்டுவதன் மூலம் ஒலியெ ழுப்பும் கருவி) மூலமான இசையில் தேர்ச்சி பெற்றுள் ளது.
இதனால், ‘ஷிமோன்’ தற் போது பாடல் வரிகளுக்கு ஏற்ப தானாகவே இசையமைத்து வருகிறது என்று அதன் வடிவமைப்பாளர்கள் தெரி வித்துள்ளனர்.
ஒளியை ஒலியாக மாற்றி சாதனை
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே முதல் முறையாக ஒளியை ஒலி வடிவில் மாற்றி சேமிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டிற் சிட்னி பல்கலைக்கழகத்தில் ஒளித் தகவலை ஒலி வடிவில் மாற்றி சேமித்து வைக்கும் தொழில்நுட்பத்தைக் கண்டியறியும் சோதனையை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர்.
ஒளியை ஒலி வடிவாகவும் ஒலியை ஒளி வடிவாகவும் மாற்றி கம்யூட்டர் சிப்பில் சேமித்து வைக்க முடியும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் மிக அதிவேக கம்யூட்டர்களை வடிவமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தொழில் நுட்பத்தைக் கொண்டு உருவாகும் கம்யூட்டர் போட்டோனிக் கம்யூட்டர் (Photonic computer) எனப்படும் என்றும் அவை தற்போதை கம்யூட்டர்களை விட 20 மடங்கு அதிவேகமாக இயங்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.