இந்தியாவில் புதிய சட்டங்கள் 2017

குழந்தைகளை பலாத்காரம் செய்தால் மரண தண்டனை...

12 வயது மற்றும் அதற்கு கீழ்பட்ட வயதில் உள்ள குழந்தைகளை பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத்திற்கு மத்திய பிரதேச அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் அரசு வேலை, உள்ளாட்சி பதவி கிடையாது

அஸ்ஸாம் அரசு கடந்த சில நாட்களாக பல்வேறு புதிய அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அண்மையில் அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்தாலோ அல்லது மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை கவனிக்காமல் விட்டாலோ 10 சதவீதம் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்ற புதிய சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றியது. வயதான பெற்றோர்களையும் மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை கவனிக்கவே இந்த திட்டம் நடைமுறை படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அஸ்ஸாம் மாநில அரசு புதிய மக்கள் தொகை கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி அரசு ஊழியர்கள் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் பதவி பறிபோகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கும் 2 குழந்தைகளுக்கு மேல் இருக்கக்கூடாதாம். எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர்கள் இந்த விதியை மீறினால் தகுதி இழப்புக்கு ஆளாவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் கழிப்பறை இருந்தால் தான் தேர்தலில் போட்டியிட முடியும்

வீட்டில் கழிப்பறை இருந்தால் மட்டுமே உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்களில் போட்டியிட அனுமதி வழங்கப்படும் என்ற புதிய சட்டம் பீகாரில் அறிமுகப் படுத்த பட்டுள்ளது.

புதிய வீட்டு வாடகை சட்டம்

வாடகை நிர்ணயத்துக்கான புதிய சட்ட திருத்த மசோதாவை வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை அறிமுகம் செய்தார். சிறப்புக்கள்
  • எழுத்துபூர்வ ஒப்பந்தம் இன்றி வாடகை,குத்தகைக்கு விடக்கூடாது
  • உரிமையாளர் - வாடகைதாரர் இடையே ஏற்படும் பிரச்னைகளை விசாரிக்க, மாவட்ட கலெக்டர் நிலையில், வாடகை அதிகாரிகள் நியமிக்கப்படுவர்.
  • இதற்கு மேல்,வாடகை நீதிமன்றம், தீர்ப்பாயம் அமைக்கப்படும்
  • அரசு நிறுவனங்கள், இந்துசமய அறநிலையத் துறை, வக்பு வாரிய சட்டத்தில் பதிவு செய்யப் பட்ட சொத்துகள் இச்சட்ட வரம்புக்குள் வராது.

புதிய மோட்டார் வாகன சட்டம்

  • மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் - அதிகபட்சமாக 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும்.
  • செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுவது- அபராதம் 5,000 ரூபாயாக உயர்த்தப்படுகிறது.
  • போக்குவரத்து சிக்னலை மதிக்காதது, காரில் இருக்கை பெல்ட் அணியாமல் ஓட்டுவது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் செல்வது ஆகியவற்றுக்கு 1,000 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும். அதிகபட்சமாக  3 மாதம் டிரைவிங் லைசென்ஸ்  தடை விதிக்கப்படும். இந்தச் சட்டத்தை மீறும் எம்பிக்கள், எம்எல்ஏ.க்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரசு ஊழியர்கள் இந்த குற்றங்களை செய்து சிக்கினால் இரு மடங்கு தொகை அபராதம் வசூலிக்கப்படும்.
  • 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் வாகனத்தை இயக்கி விபத்து ஏற்பட்டால் அது குற்றமாக கருதப்படும். அந்த சிறுவர்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம் மற்றும் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.