18 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

ரயில் பயணியருக்கு சலுகை விரைவில் அமல்படுத்த திட்டம்

  • விமான நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல்களை போல், ரயில் டிக்கெட் முன்பதிவுகளிலும், விரைவில், 'பிளக்சி பேர்' திட்டம் அமல்படுத்தப்படும்,'' என, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயல் தெரிவித்து உள்ளார்.

ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இந்தியா
  • இலங்கைக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது இந்தியா.
  • ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கடைசி ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 44.5 ஓவர்களில் 215 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர் பேட் செய்த இந்திய அணி, 32.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் எடுத்து வென்றது.
மல்யுத்த சாம்பியன்ஷிப்: தங்கம் வென்றார் சுஷில் குமார்
  • காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் தங்கப் பதக்கம் வென்றார்.
  • 74 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் போட்டியிட்ட சுஷில் குமார், இறுதிச்சுற்றில் நியூஸிலாந்தின் அகாஷ் குலார்ஸை வீழ்த்தி முதலிடம் பிடித்தார்.
தேசிய துப்பாக்கி சுடுதல்: 5 தங்கம் வென்றார் அஞ்சும்
  • தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் தனிநபருக்கான 50 மீட்டர் ரைஃபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் பஞ்சாப் வீராங்கனை அஞ்சும் முட்கில் தங்கம் வென்றார். 
  • மேலும், இப்போட்டியின் அணிகளுக்கான பிரிவிலும் அவர் தங்கம் வென்றார்.

இன்று

சர்வதேச இடம் பெயர்வோர் தினம்
  • உலகில் முறையாக இடம் பெயர்ந்தவர்களுக்கு உரிய மனித உரிமைகள் வழங்கப்பட வலியுறுத்தியும், சமூக, பொருளாதாரத்தில் முன்னேறுவதற்குரிய வழிமுறைகளை அந்தந்த நாடுகள் செயல்படுத்த வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் டிச., 18ல், சர்வதேச இடம்பெயர்வோர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 
  • 'உலகில் பாதுகாப்பான இடம்பெயர்வு' என்பது இந்தாண்டு மையக்கருத்து. 
1812 - டிசம்பர் 18

  • ஹென்றி போவர் ஐயர், சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில், பிரான்கோயிஸ் போவியர் - ஸ்டீனா தம்பதிக்கு மகனாக, 1812 டிச., 18ல் பிறந்தார். கிறிஸ்தவர்களின் வேத நுாலான பைபிளை தமிழில் மொழிபெயர்த்த ஒரு குழுவின் தலைவராக செயல்பட்டவர். 
  • கிறிஸ்தவ ஆன்மிகப் பணிகளுடன், சில தமிழ் இலக்கியப் படைப்புகளையும் படைத்தவர். 1851ல், இந்து ஜாதிகள் பற்றிய, ஆங்கில நுாலை வெளியிட்டவர்.
  • கடந்த, 1858ல், வேதியர்புரத்தை விட்டு நீங்கி, வேதாகம மொழிபெயர்ப்பில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
  •  1864ல், மொழிபெயர்ப்பு பணிகளுடன், சென்னை வேப்பேரியிலுள்ள பரி.பவுல் ஆலய குருவாகவும் நியமனம் பெற்றார். பகவத் கீதையையும், நன்னுாலையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். 1885ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.