16 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து தலைமை செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் ஆலோசனை
- ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு அளித்தனர்.
- இதையடுத்து ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து தலைமை செயலகத்தில் சிறப்பு தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
மிசோராமில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து அரசு அனுமதி
- பிரதமர் நரேந்திர மோடி இன்று மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களுக்கு சுற்றுப் பயணம் சென்றார்.
- மிசோராமில் அஸிவால் நகரில் 60-மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட நீர்பாசன திட்டத்தை துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து மேகாலயாவில் ஷில்லாங்-நாங்ஸ்டோன்-ரோக்ஜெயிங்-துரா ஆகியவற்றை இணைக்கும் சாலை திட்ட பணிகளை தொடங்கி வைத்தார்.
- மேகாலயாவை ஒரு சிறந்த சுற்றுலாத் தலமாக மாற்ற விரும்புகிறோம் என அப்போது அவர் கூறினார்.
இலங்கை கடற்படையினரின் வணிக வளாக கட்டடம் திறப்பு
- கச்சத்தீவில் இலங்கை கடற்படையினரின் வணிக வளாக கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
- தீவாக இருந்த கச்சத்தீவை தற்போது கட்டடங்களாக மாற்றி வருகிறது இலங்கை அரசு. கச்சத்தீவில் ஏற்கனவே கடற்படை தளம் அமைந்துள்ள நிலையில் தற்போது வணிக வளாகம் திறக்கப்பட்டுள்ளது.
- இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரிக்கு 19ம் தேதி வருகிறார் பிரதமர்
- ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வரும் 19ம் தேதி பிரதமர் மோடி வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
- அதே சமயம், ஒக்கி புயல் பாதித்த கன்னியாகுமரி மற்றும் கேரள மாவட்டங்களுக்கு பிரதமர் மோடி வருகை தர இருப்பதாகவும், பிரதமர் மோடியின் வருகை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், பயணத் திட்டம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று தமிழிசை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்பு
- காங்கிரஸ் கட்சியின் 87வது தலைவராக ராகுல் காந்தி இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். கட்சியின் தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்று, 19 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவர் பொறுப்பேற்பு விழா இன்று நடைபெற்றது.
அமெரிக்கா: இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியன் புலிசிக் தேர்வு
- அமெரிக்காவில் ஆடவர் பிரிவில் இந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக கிறிஸ்டியன் புலிசிக் (19) தேர்வு செய்யப்பட்டார்.
- இந்த விருதை இளம் வயதிலேயே பெறும் வீரர் என்ற கௌரவத்தையும் அவர் பெற்றுள்ளார்.
துபை ஓபன்: குரூப் பிரிவு 3 ஆட்டங்களிலும் சிந்து வெற்றி
- உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில், குரூப் பிரிவு 3-ஆவது ஆட்டத்திலும் இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றார்.
- இவர், 21-9, 21-13 என்ற செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமகுச்சியை வீழ்த்தினார்.