14 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
எச் - 1பி விசா உள்ளவர்களுக்கு அமெரிக்க அரசு புது சலுகை
- 'எச் - 1பி விசா வைத்திருப்பவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம்' என, அமெரிக்காவின் குடியுரிமை மற்றும் குடியேற்றத் துறை தெரிவித்துள்ளது.
- அமெரிக்காவில் பணியாற்றுவதற்காக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, எச் - 1பி விசா வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு, 65 ஆயிரம் பேருக்கு இந்த விசா வழங்கப்படுகிறது.உலக அளவில் இந்த விசாவை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், நம் நாடு முன்னணியில் உள்ளது.
- வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:எச் - 1பி விசா பெற்றுள்ளவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணியாற்றலாம். ஆனால், அந்த நிறுவனங்களின் அனுமதியைப் பெற வேண்டும். இதற்காக, ஐ - 129 என்ற விண்ணப்பத்தை, விசா பெறும்போது தர வேண்டும்.
'பேஸ்புக், டுவிட்டரில்' காஸ் சிலிண்டர் பதிவு
- வீட்டு சமையல் காஸ் சிலிண்டரை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளங்கள் வாயிலாக, பதிவு செய்யும் சேவையை, இந்தியன் ஆயின் நிறுவனம் அதிகார பூர்வமாக துவக்கியுள்ளது.
- பொதுத்துறையை சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனங்கள், வீடு மற்றும் வணிக பயன்பாடு என, இரண்டு வகை, சமையல் காஸ் சிலிண்டர்களை சப்ளை செய்கின்றன. தற்போது, வீட்டு வாடிக்கையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களின், கட்டணமில்லா தொலைபேசி, இணையதளம் வாயிலாக, சிலிண்டருக்கு பதிவு செய்யலாம்.
கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
- மும்பை: பிரான்ஸ் நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டுள்ள, 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல், கடற்படையில் இன்று முறைப்படி இணைந்தது.
- மும்பையில் நடந்த விழாவில், பிரதமர், நரேந்திர மோடி இதை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.
ரயிலில் நவீன வசதிகள்: வருது, 'அனுபூதி' பெட்டி
- புதுடில்லி: விமானத்தில் உள்ள வசதிகளுக்கு இணையான, 'அனுபூதி' பெட்டிகளுடன், சதாப்தி ரயில்களை இயக்க, ரயில்வே திட்டமிட்டுள்ளது.
- 'ரயில் பயணியருக்கு கூடுதல் வசதிகள் அளிக்கும் வகையில், விமானத்தில் உள்ளதை போன்ற வசதிகளுடன், புதிய அனுபவம் என பொருள்படும், 'அனுபூதி' பெட்டிகள் அறிமுகம் செய்யப்படும்' என, முந்தைய காங்கிரஸ் அரசு, 2013 ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்திருந்தது.
- பல நவீன வசதிகள் அடங்கிய இந்தப் பெட்டிகள், சென்னையில் உள்ள, ஐ.சி.எப்., ஆலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டது. முதற்கட்டமாக, 10 பெட்டிகள் பயன்படுத்துவதற்கு தயார் நிலையில் உள்ளன. இதில், மேற்கு மற்றும் மத்திய ரயில்வேகளுக்கு தலா இரண்டு பெட்டிகளும், வடக்கு ரயில்வேக்கு, ஆறு பெட்டிகளும் அனுப்பப்பட்டுள்ளன.
ரோஹித் சர்மா இரட்டை சதம்: இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி
- இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- கேப்டன் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
துபை ஓபன்: முதல் ஆட்டத்தில் சிந்து வெற்றி; ஸ்ரீகாந்த் தோல்வி
- துபையில் புதன்கிழமை தொடங்கிய உலக சூப்பர் சீரிஸ் பைனல்ஸ் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, 21-11, 16-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் ஹி பிங்ஜியாவை வீழ்த்தினார்.
- ஆடவர் பிரிவில், டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸல்ùஸன்னிடம் 13-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் இந்தியாவின் ஸ்ரீகாந்த் தோல்வி அடைந்தார்.