10 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

2018-ம் ஆண்டின் நிறமாக பர்பிள் நிறம் தேர்வு: அமெரிக்காவின் பேண்டோன் அமைப்பு அறிவிப்பு

  • அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் இயங்கி வரும்  'பேண்டோன்' என்ற நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் அதிகாரப்பூர்வமான நிறம் அறிவிப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.
  • 2010ல் இருந்து இந்த நடைமுறை வழக்கத்தில் இருக்கிறது.  இந்த நிலையில் 2018-ம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ நிறத்தை அந்த நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.
  •  அதன்படி அந்த நிறுவனம் பர்பிள் நிறத்தை இந்த ஆண்டின் நிறமாக தேர்வு செய்து இருக்கிறது.
குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு சென்னை வருகை

  • சென்னையில் பாரதிய வித்யா பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று காலை சென்னை வந்தார். 
  • வானவில் பண்பாட்டு மையத்தின் 24-ம் ஆண்டு விழாவை ‘பாரதி பெருவிழா, தேசபக்தி பெருவிழாவாக’ நேற்று தொடங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குடியரசு துணை தலைவர் வெங்கய்யா நாயுடு இன்று விமானம் வழியே சென்னை வந்தார். 
நேரடி வரி வருவாய் ரூ.4.8 லட்சம் கோடியாக அதிகரிப்பு
  • நேரடி வரிகள் மூலம் கிடைக்கும் வருவாயானது, ஏப்ரல்-நவம்பர் மாத காலகட்டத்தில் ரூ.4.8 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
  • இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
  • 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில், நேரடி வரிகள் மூலம் ரூ.4.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் நேரடி வரிகள் மூலம் கிடைத்த வருவாயுடன் ஒப்பிடுகையில், இந்த அளவானது 14.4 சதவீதம் அதிகமாகும்.
உலக ஹாக்கி லீக்: இறுதிச்சுற்றில் ஆர்ஜென்டீனா-ஆஸ்திரேலியா 
  • உலக ஹாக்கி லீக் போட்டியின் 2-ஆவது அரையிறுதிச் சுற்றில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.
  • இதையடுத்து, முதல் அரையிறுதியில் இந்தியாவை வீழ்த்தியிருந்த ஆர்ஜென்டீனா அணியுடன் இறுதிச்சுற்றில் பலப்பரீட்சை நடத்துகிறது ஆஸ்திரேலியா.
  • வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவும்-ஜெர்மனியும் மோதுகின்றன.
இளையோர் ஒலிம்பிக்: கோஷ், மானே தகுதி
  • ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியின் இளையோர் பிரிவில் இந்தியாவின் மெஹுலி கோஷ், துஷர் மானே ஆகியோர் முறையே தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
  • இளையோர் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் முதல் வீரர் என்ற பெருமையை துஷர் மானேவும், முதல் வீராங்கனை என்ற பெருமையை மெஹுலி கோஷும் பெற்றுள்ளனர்.