08 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
சென்னையில் பூமிக்கடியில் மின் கம்பிகள்; நிதி வழங்கி மத்திய அரசு ஒப்புதல்
சென்னையில், மின் கம்பிகளை பூமிக்கடியில் அமைக்கும் பணிகளுக்காக, 3,200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகவல் ஆணையர்கள் நியமனம்
சென்னையில், மின் கம்பிகளை பூமிக்கடியில் அமைக்கும் பணிகளுக்காக, 3,200 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க, மத்திய அரசு சம்மதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தகவல் ஆணையர்கள் நியமனம்
- சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தின், தலைமை ஆணையராக, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஷீலாப்ரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
- தகவல் ஆணையர்களாக, செல்வராஜ், தமிழ்குமார், பிரதாப்குமார், முத்துராஜ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்த சுவடு; மலேசியா பல்கலை பேராசிரியர் தகவல்
- ''ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்த சுவடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன,'' என மலேசியா மலாயாப் பல்கலை இந்திய ஆய்வியல் துறை பேராசிரியர் குமரன் தெரிவித்தார்.
- சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரியில் 'உலகளாவிய தமிழ்-காலந்தோறும் தமிழ் இலக்கியங்களில் பொருண்மைகளும் புதுமைகளும்' என்ற தலைப்பில் நடந்தது.
- 7ம் நுாற்றாண்டில் அரசவை புலவர்களால் பாடப்பட்ட மூன்று வரிக்கவிதைகளில், ஜப்பானில் தமிழர்கள் வாழ்ந்தது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிகளை அடிச்சுவடாக வைத்து ஜப்பானில் ஆய்வு செய்த போது தமிழர்கள் தரை, கடல் வழியாக சென்றது தெரியவந்துள்ளது என தெரிவித்தார்.
டெஸ்ட் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு முன்னேறினார் கோலி
- ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி 2-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
- இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக 6-ஆவது இடத்தில் இருந்த கோலி, அந்தத் தொடரில் மொத்தமாக 610 ரன்கள் குவித்துள்ளார். அதிலும் தில்லியில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியின்போது, ஒரு இன்னிங்ஸில் அவர் விளாசிய 243 ரன்கள் அவரது தனிப்பட்ட அதிகபட்சமாகும்.
- இவை தவிர 2 முறை இரட்டைச் சதம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஹாட்ரிக் சதமடித்த முதல் கேப்டன், 6 முறை இரட்டைச் சதமடித்த முதல் கேப்டன் போன்ற சாதனைகளையும் படைத்தார்.
பாட்மிண்டன் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் ஸ்ரீகாந்த்
- சர்வதேச பாட்மிண்டன் தரவரிசையின் ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், ஓரிடம் முன்னேறி 4-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
- காயம் காரணமாக சீன ஓபன், ஹாங்காங் ஓபன் போட்டிகளை தவிர்த்த ஸ்ரீகாந்த், அடுத்த வாரம் நடைபெறவுள்ள துபை சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
- இதனிடையே, இந்திய இளம் வீரரான லக்ஷயா சென் 19 இடங்கள் முன்னேறி 89-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
உலக ஹாக்கி லீக்அரையிறுதி: இந்தியா-ஆர்ஜென்டீனா மோதல்
- உலக ஹாக்கி லீக் அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவும், ஒலிம்பிக் சாம்பியனான ஆர்ஜென்டீனாவும் வெள்ளிக்கிழமை மோதுகின்றன.
- புதன்கிழமை நடைபெற்ற காலிறுதியில் பெல்ஜியத்தை வீழ்த்தியிருந்தது இந்தியா.
- இந்நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் ஆர்ஜென்டீனா 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதையடுத்து அரையிறுதியில் அந்த அணி இந்தியாவை எதிர்கொள்கிறது.