07 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்க அமெரிக்கா முடிவு
- இஸ்ரேல் தலைநகராக, ஜெருசலேமை அங்கீகரிக்க, அமெரிக்க அதிபர், டிரம்ப் அங்கிகரித்துள்ளார்.
- மத்திய கிழக்கு நாடுகளான, இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும், பல ஆண்டுகளாக பிரச்னை இருக்கிறது.
- பெரும்பாலான உலக நாடுகள், ஜெருசலேமை, இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளின் துாதரகங்கள், டெல் அவிவ் நகரில் செயல்படுகின்றன.இந்நிலையில், ஜெருசலேமை இஸ்ரேல் தலைநகராக அங்கீகரிக்க, அமெரிக்க அதிபர், டிரம்ப் அங்கிகரித்துள்ளார்.
மீண்டும் அதிபர் பதவிக்கு புடின் போட்டி
- மாஸ்கோ: ரஷ்ய அதிபர் பதவிக்கு தாம் மீண்டும் போட்டியிட உள்ளதாக விளாடிமிர்புடின் அறிவித்தார்.ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் 2018-ம் ஆண்டு மே மாதம் நிறைவடைகிறது.
- இதையடுத்து அதிபர் தேர்தல் விரைவில் நடக்க உள்ளது. ஏற்கனவே மூன்று முறை அதிபராக பதவி வகித்த புடின், வரும் அதிபர் தேர்தலிலும் மீண்டும் போட்டியிட உள்ளதாக நேற்று நடந்த நிகழ்ச்சிஒன்றில் பேசினார். விளாடிமிர் புடின் மீண்டும் அதிபரானால் 2024-ம் ஆண்டு வரை அப்பதவியில்பதவியில் இருப்பார்
புது பாட திட்டத்தில் கலாம், நம்மாழ்வார் - 'கூகுள்' சுந்தர் பிச்சைக்கும் இடமுண்டு
- தமிழக பள்ளிக்கல்வி யின் புதிய பாடத்திட்டத் தில், முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம், இயற்கை விஞ்ஞானி, நம்மாழ்வார் பற்றிய பாடங்கள் இடம் பெற உள்ளன.
- தமிழகத்தில், 14 ஆண்டுகளாக, பள்ளிக்கல்வி பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. 10 ஆண்டுகளில், தொழில்நுட்பம், விவசாயம், அரசு நிர்வாக முறை மற்றும் சர்வதேச அரசியல் என, அனைத்திலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
'தலாக்' எதிர்ப்பு சட்டம் உ.பி., அரசு ஒப்புதல்
- முஸ்லிம்கள் மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவது சட்ட விரோதமானது; செல்லாது என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
- உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன், 177 சம்பவங்களும், தீர்ப்புக்கு பின், 66 சம்பவங்களும் நடந்துள்ளன.
- இதில், உ.பி.,யில் அதிகளவு விவாகரத்து நடந்துள்ளது. இதற்கிடையே, தலாக் கூறி விவாகரத்து செய்வதை, தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்து, விவாகரத்து பெற்றால், மூன்று ஆண்டு சிறை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை, மத்திய அரசு இயற்ற உள்ளது.
டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்தியா
- இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது.
- இதையடுத்து, 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
குர்தீப் சிங் 3 தேசிய சாதனைகள்
- அமெரிக்காவின் அனாஹெய்ம் நகரில் நடைபெற்று வரும் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் குருதீப் சிங் 3 தேசிய சாதனைகள் படைத்தார்.
- இப்போட்டியில் 105 கிலோவுக்கு கூடுதலான எடைப் பிரிவில் பங்கேற்ற அவர், ஸ்னாட்ச் பிரிவில் 172, கிளீன் அன்ட் ஜெர்க் பிரிவில் 216 என மொத்தமாக 388 கிலோ எடையைத் தூக்கி 13-ஆவது இடம் பிடித்தார். எனினும், அவர் தூக்கிய எடையானது இந்திய அளவில் சாதனை படைத்துள்ளது.
- இந்தியாவில் ஸ்னாட்ச் பிரிவில் குருதீப் 171 கிலோ தூக்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதைவிட ஒரு கிலோ அதிகமாக தூக்கி (172), தனது சாதனையை அவரே முறியடித்துள்ளார்.
- அதேபோல் ஒட்டுமொத்தமாக சரப்ஜித் சிங் கடந்த 2010 காமன்வெல்த் போட்டியில் 384 கிலோ தூக்கியதே அதிகபட்சமாக இருந்தது. தற்போது குருதீப் சிங் 388 கிலோ எடையை தூக்கி அந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி
- இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது போட்டியில் ஆஸ்திரேலியா 120 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இதையடுத்து 5 போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில், ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலை வகிக்கிறது.
'சிறந்த நபர்' விருதுக்கு 'செல்பி' குரங்கு தேர்வு
- இந்தோனேஷியாவில், சிரித்தபடி, 'போஸ்' தந்து, 'செல்பி' எடுத்துக் கொண்ட குரங்கு, 'இந்தாண்டின் சிறந்த நபர்' என்ற விருதுக்குரியதாக, 'பீட்டா' எனப்படும், விலங்குகள் உரிமை குழுவால் அறிவிக்கப்பட்டு உள்ளது.
- குரங்கு எடுத்த புகைப்படத்துக்கு, பிரிட்டன் புகைப்பட கலைஞர், டேவிட் ஸ்லேட்டர் உரிமை கொண்டாடினார்.
- அந்த புகைப்படத்துக்கு, உரிமையாளர், நருடோ மட்டுமே என, அறிவிக்கக் கோரி, பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
- அந்த வழக்கு முடிவுக்கு வந்தது.
- இந்நிலையில், 'இந்தாண்டின் சிறந்த நபர்' என்ற விருதுக்கு, நருடோ குரங்கை, பீட்டா அமைப்பு அறிவித்துள்ளது.