06 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

அறிவியல் நகரம் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்


  • சென்னை: அறிவியல் நகரம் விருதுகள் - 2016க்கான, தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு முதுநிலை அறிவியலாளர் விருது மற்றும் தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
  • தமிழகத்தைச் சேர்ந்த, தகுதியான அறிவியலாளர்கள், www.sciencecitychennai.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தை, அறிவியல் நகரத்திற்கு, ஜன., 12க்குள் அஞ்சல் வழியாகவோ, நேரிலோ அளிக்கலாம்.


புத்தாண்டு முதல், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., துவக்கம்


  • தமிழகத்தில், புத்தாண்டு முதல், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' சேவையை துவங்க உள்ளது.
  • பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், எதிர்பார்க்கும், '4ஜி' சேவை, ஜன., முதல் துவங்கும். அதற்காக, 'நோக்கியா' நிறுவனம் வாயிலாக, 200 கோபுரங்களை நிறுவுவதற்கு, கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.
  •  தலைமை பொது மேலாளர், கலாவதி கூறியதாவது: இதனால், பி.எஸ்.என்.எல்., சேவை பல மடங்கு அதிகரிக்கும்.
ஆர்.கே.நகரில் 21ல் அரசு விடுமுறை

  • இடைத்தேர்தலை ஒட்டி, டிச., 21ல், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதிக்கு, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • சென்னை மாவட்டத்தில் உள்ள, ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதியில், டிச., 21ல், இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி அன்று, ஆர்.கே.நகர் தொகுதிக்கு மட்டும், அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றி

  • ஒரிடத்தில் இருந்து மற்றொரு இலக்கை துல்லியமாக தாக்கும் ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.
  • ராணுவ ஆராய்ச்சி மற்றும் மே்பாட்டு மையத்தின் (டிஆர்.டி.ஓ.) சார்பில் ஆகாஷ் ஏவுகணை நேற்று ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஏவு தளத்தில் இருந்து வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.


உலக ஹாக்கி லீக்: ஸ்பெயின் அணி வெற்றி

  • உலக ஹாக்கி லீக் போட்டியில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஆர்ஜென்டீனா அணியை வீழ்த்தியது.
  • ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தி வந்தது.
  • 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணி லீக் சுற்றில் ஏற்கெனவே ஒரு வெற்றியை ருசித்துள்ளது. இந்நிலையில், இரண்டாவது வெற்றியை அந்த அணி பெற்றுள்ளது.

பந்துவீச கூடுதல் நேரம்: மே.இ. அணி கேப்டன் ஹோல்டருக்குத் தடை!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆட்டத்தில் பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டதற்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சை: 2018- குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்க ரஷ்யாவிற்கு தடை


  •  ஊக்க மருந்து விவகாரத்தில் ரஷ்ய வீரர்கள் சிக்கியதால் 2018-ம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவிற்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தடை விதித்துள்ளது.
  • ரஷ்யாவில் கடந்த 2014-ம் ஆண்டு சோச்சி மாகாணத்தில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்தன. இதில் ரஷ்ய வீரர்கள் ஊக்கமருந்து உட்கொண்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு அமைப்பு விசாரணை நடத்தி அறிக்கை சமர்பித்தது.அதில் ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியுள்ளது.