03 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
நிலவில் தரையிறங்க தயாராகும் இஸ்ரோ
ஸ்பெயினை பந்தாடிய பெல்ஜியம்
யு-19 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு
- தனது பல்வேறு ஆய்வுத் திட்டங்கள் மூலம் உலகின் மிகச் சில முன்னணி விண்வெளி ஆய்வு அமைப்புகளின் பட்டியலில் இடம் பிடித்துள்ள இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பு (இஸ்ரோ), தனது போட்டியாளர்களுக்கு பலத்த போட்டியை அளிக்கும் வகையில் மேலும் பல சாதனைத் திட்டங்களை அறிவித்து வருகிறது.
- "சந்திரயான் - 2' எனப் பெயரிடப்பட்டுள்ள அந்த விண்வெளித் திட்டம்தான், நிலவில் தரையிறங்குவதற்கான இந்தியாவின் முதல் திட்டமாகும். அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் அந்த விண்கலம் சந்திரனை நோக்கி அனுப்பப்படும் என்று தெரிகிறது.
வீட்டில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க
- அனைத்து தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களும், தங்களது செல்போன் எண்ணுடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது அவசியம். இதற்கு 2018, பிப்ரவரி 6ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
- இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
- முதல் வழி : வாடிக்கையாளர்கள், தங்களது தொலைத்தொடர்பு நிறுவனத்தின் இணையதளத்தின் மூலம் ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம்.
- இரண்டாவது வழி: தொலைத் தொடர்பு நிறுவனத்தின் குரல் பதிவு ஐவிஆர் உதவி மையம் மூலம் ஆதார் எண்ணை இணைக்கலாம்.
குமுறும் பாலி எரிமலை
- பாலி தீவில் எரிமலை குமுறி வருவதால் மக்களை வெளியேற்ற இந்தோஷிய அரசு முயற்சித்தும் மக்கள் வெளியேற தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.
- இந்தோனேஷியாவில் பாலி தீவில் எரிமலை அச்சுறுத்தல் இருந்தாலும் அப்பகுதியில் வாழந்து வரும் கிராமத்து மக்கள் ஆயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர். ஆகுங் எரிமலையில் இருந்து தினமும் கரும்புகை வெளியேறி வருகிறது.
- உலக ஹாக்கி லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தியது.
- இந்திய அணி திங்கள்கிழமை விளையாடவுள்ள தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ஜெர்மனி அணியை எதிர்கொள்கிறது.
யு-19 உலகக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு
- பத்தொன்பது வயதுக்கு உள்பட்டோருக்கான (19) ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இப்போட்டி வரும் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 3-ஆம் தேதி வரை நியூஸிலாந்தில் நடைபெறவுள்ளது.
- கடந்த சீசனில் இந்தியா, இறுதிச்சுற்றில் மேற்கிந்தியத் தீவுகளிடம் தோல்வி கண்டிருந்தது. அதற்கு முன்பாக 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இந்தியா சாம்பியன் ஆகியுள்ளது.