02 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

இன்ஃபோசிஸ் நிறுவன புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமனம்

  • இன்ஃபோசிஸ் நிறுவன புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சலில் எஸ்.பரேக் நியமனம்
  • இந்தியாவின் இரண்டாவது மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப மென்பொருள் ஏற்றுமதி நிறுவனங்களில் ஒன்றான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த விஷால் சிக்கா கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். 
  • அதனை தொடர்ந்து அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டு தற்காலிகமாக தலைமை செயல் அதிகாரியாக யூ.பி.பிரவீன் ராவ் நியமிக்கப்பட்டார். 
  • இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக சாலில் எஸ் பாரேக்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் வரும் புத்தாண்டு 2018 ஜனவரி 2-ஆம் தேதி பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ரூ.33 ஆயிரம் கோடி மதிப்புள்ள 249 லட்சம் டன் நெல் கொள்முதல்

  • பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களில் நடப்பு ஆண்டில் மட்டும் 249 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் பஞ்சாப்பில் இருந்து 179 லட்சம் டன்னும், ஹரியாணாவில் இருந்து 70.5 லட்சம் டன்னும் கொள்முதல் செய்யப்பட்டவை. இது கடந்த காலங்களை விட அதிகளவாகும்.
  • பஞ்சாப் விற்பனை மற்றும் பண்டக காப்பக நிலையத்தில் இருந்து அரசு சார்பில் 98.5 சதவீத நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதர சதவீதம் விற்பனையாளர்களால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 
  • இதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.33,800 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 30 ஆயிரம் கோடி விவசாயிகள் மற்றும் கமிஷன் ஏஜென்டுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
முதல் நாளில் இந்தியா 371/4: ஒரே நாளில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ள விராட் கோலி

இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது. முரளி விஜய், கோலி ஆகிய இருவரும் தலா 150 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார்கள்.
இந்திய கேப்டன் விராட் கோலி, தனது 20-வது டெஸ்ட் சதத்தை இன்று பதிவு செய்துள்ளார். இதன்மூலம் ஒரே நாளில் அவர் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 
குறைந்த இன்னிங்ஸில் 20 டெஸ்ட் சதங்கள், அடுத்தடுத்த இன்னிங்ஸில் அதிக சதங்கள் எடுத்த இந்திய கேப்டன், அதிவேக 5000 டெஸ்ட் ரன்கள் மேலும் பல. 

கால்பந்து உலகக் கோப்பை: முதல் போட்டியில் சவுதி அரேபியா

  • 2018 கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி ரஷ்யாவில் ஜுன் 14 முதல் ஜுலை 15 வரை நடைபெறவுள்ளது. 
  • இப்போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கான பரிசுத்தொகை ரூ. 2602 கோடி. 
  • அதாவது 400 மில்லியன் டாலர். இது கடந்த உலகக் கோப்பைப் போட்டியின் பரிசுத்தொகையை விடவும் 12 சதவிகிதம் அதிகம்.
  • உலகக் கோப்பைப் போட்டியின் முதல் நாளில் போட்டியிடும் முதல் ஆசிய அணி என்கிற பெருமை சவுதி அரேபியாவுக்குக் கிடைத்துள்ளது. அடுத்த நாள் 2010 சாம்பியன் ஸ்பெயினும் நடப்பு ஐரோப்பா சாம்பியன் போர்ச்சுக்கல்லும் மோதவுள்ளன. 
  • 1986 முதல், உலகக் கோப்பைப் போட்டிகளில் பங்கேற்கும் அமெரிக்காவும் நான்குமுறை சாம்பியன் பட்டம் பெற்ற இத்தாலியும் இப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை.