01 டிசம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

24 ஆண்டுக்கு பின் உருவான, 'ஒக்கி !' : அரிதான புயல் என ஆய்வாளர்கள் கருத்து

இருபத்தி நான்குஆண்டுகளுக்கு பின், கன்னியாகுமரி கடல் பகுதியில், 'ஒக்கி' புயல் உருவாகியுள்ளது. 'ஒக்கி' புயல் உருவானது குறித்து, புவி மற்றும் கடலியல் ஆய்வாளர்கள், ஆய்வு மேற்கொண்டுஉள்ளனர். இந்திய பெருங்கடலில் உருவான, 'ஒக்கி' புயல், காற்றழுத்த தாழ்வு மண்டலத்தில் இருந்து, மிக விரைவாக, 10 மணி நேரத்திற்குள், புயலாக
வலுப்பெற்றுள்ளது.

அதிபர் விமானத்தில் பேட்டி அளித்த முதல் இந்திய வம்சாவளி அதிகாரி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின், 'ஏர்போர்ஸ் ஒன்' விமானத்தில், வெள்ளை மாளிகை முதன்மை துணை செய்தித் தொடர்பாளர், ராஜ் ஷா, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். இவ்வாறு பேட்டி அளிக்கும் இந்தியாவை பூர்வீகமாக உடைய, முதல் அதிகாரி, ராஜ் ஷா.

அமெரிக்க மேயராக சீக்கிய பெண் தேர்வு

நியூயார்க்: அமெரிக்காவில் முதல் முறையாக, சீக்கிய மதத்தை சேர்ந்த பெண் ஒருவர், மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, யுபா நகரில், 2014ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற, சீக்கிய மதத்தை சேர்ந்த பெண், பிரீத் டிட்பால், தற்போது, துணை மேயராக பதவி வகிக்கிறார்.

4 நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர ரயில் பாதை திட்டம்

புதுடில்லி: சென்னை, மும்பை, கோல்கட்டா, டில்லி நகரங்கள் இடையே, மணிக்கு, 160 கி.மீ., வேகத்தில் அதிவேக ரயில்களை இயக்கும் வகையில், தங்க நாற்கர ரயில் பாதை திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு தீவிரமாக உள்ளது

அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா- பிரதமர் மோடி இன்று சந்திப்பு

புதுடில்லி: இந்தியா வருகை தரும் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, டில்லியில் இன்று(நவ.,30) பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். கடந்த இரு ஆண்டுகளில் இருவரும் 8 முறை சந்தித்து பேசியுள்ளனர். கடந்த 2015ம் ஆண்டு குடியரசு தின விழாவில், அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்: வரலாறு படைத்தார் மீராபாய் சானு

உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாய்கோம் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.

இன்று தொடங்குகிறது ஹாக்கி உலக லீக்: முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்

ஹாக்கி உலக லீக் போட்டியானது, ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்தியா.

உயர்கிறது இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஊதியம்: பேச்சுவார்த்தையில் உடன்பாடு

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக அணி தரப்புக்கும், பிசிசிஐயின் நிர்வாகக் குழுவுக்கும் இடையே வியாழக்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்பட்டது.


இன்று
 உலக எய்ட்ஸ் தினம்

உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். எச்.ஐ.வி., (ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்) எனும் வைரசால் ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.,1, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. 'என் உடல் என் உரிமை' என்பது இந்தாண்டு மையக்கருத்து.