29 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

வெடித்துச் சிதறிய இந்தோனேஷிய எரிமலை

ஜகர்தா: தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள, மவுன்ட் அகுங் எரிமலை, 54 ஆண்டுகளுக்கு பின், பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. ஆயிரக்கணக்கான எரிமலைகள் உள்ள இந்தோனேஷியாவில், 120 எரிமலைகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன. 
பாலி தீவில், அதிகளவில் சுற்றுலா பயணியர் வரக்கூடிய குடா பகுதி அருகே, மவுன்ட் அகுங் எரிமலை உள்ளது. 54 ஆண்டுகளுக்கு முன், இந்த எரிமலை வெடித்தபோது, 7.5 கி.மீ., தொலைவுக்கு நெருப்புக் குழம்புகள் பரவியது. அதில், 1,100 பேர் இறந்தனர். இந்நிலையில், சமீபகாலமாக, இந்த எரிமலை மீண்டும் சீறத் துவங்கிஉள்ளது.

குரூப் - 2 தேர்வு, 'ரிசல்ட்' வெளியீடு
சென்னை: குரூப் - 2 உட்பட இரண்டு தேர்வுகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு தேதியை, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

67 வயதில் பட்டம் பெற்ற செல்லத்தாய்; வக்கீலாக போகிறார் வரலாறு படைத்த மூதாட்டி

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை பட்டமளிப்பு விழாவில், 67 வயது மூதாட்டி, எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்றார். கணவனை இழந்த தன்னை, மகள்கள் கைவிட்ட நிலையில், சட்டம் படிக்க உள்ளதாக, அவர் சூளுரைத்தார்.

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் : பிரதமர் உத்தரவு

புதுடில்லி : தேனியில் நியூட்ரினோ ஆய்வ மையம் அமைக்க அனுமதி அளிக்கும்படி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

ஐதராபாத் மெட்ரோ ரயில் சேவை : பிரதமர் மோடி துவக்கி வைத்தார்

ஐதராபாத்: தெலுங்கானா தலைநகர், ஐதராபாதில், மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று துவக்கி வைத்து, மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். தெலுங்கானாவில், முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி அரசு அமைந்துள்ளது. மாநிலத் தலைநகர் ஐதராபாதில், 30 கி.மீ., துார மெட்ரோ ரயில் சேவையை, பிரதமர் மோடி, நேற்று துவக்கி வைத்தார். பின், கவர்னர், நரசிம்மன், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும் அதிகாரிகளுடன், மெட்ரோ ரயிலில், மோடி பயணம் செய்தார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல்: புஜாரா 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் புஜாரா இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். கேப்டன் விராட் கோலி 5-ஆவது இடத்தில் உள்ளார்.

இன்று

1989 நவம்பர் 29

திரைப்பட பாடலாசிரியர் மருதகாசி, திருச்சி மாவட்டம், மேலக்குடிகாடு கிராமத்தில், அய்யம்பெருமாள் உடையார் - மிளகாயி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1920 பிப்., 13ல் பிறந்தார். கும்பகோணம் அரசு கல்லுாரியில் உயர் கல்வி கற்றார். சிறு வயதிலேயே, கவிதை எழுதும் ஆற்றலை பெற்றிருந்தார். கடந்த, 1949ல் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த, சார் மாயாவதி என்ற படத்திற்கு, முதல் பாடலை எழுதினார்.கருணாநிதி வசனத்தில், எம்.ஜி.ஆர்., நடித்த, மந்திரி குமாரி படத்தில், இவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. சிவாஜி நடித்த, துாக்கு துாக்கி பட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. 4,000 பாடல்களுக்கு மேல் எழுதியவர்.
இவர் எழுதிய பாடல்கள், புத்தகங்கள், மே 2007ல், அரசுடைமை ஆக்கப்பட்டன. 1989 நவ., 29ல் காலமானார். அவர் இறந்த தினம், இன்று.