27 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

கொச்சி விமான நிலையத்தில் தகவல் மையம்

சபரிமலை: கொச்சி விமான நிலையத்தில் பக்தர்கள் வசதிக்காக திருவிதாங்கூர் தேவசம்போர்டின் சபரிமலை தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விமானம் மூலம் பக்தர்கள் கொச்சி வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக விமான நிலையத்தின் டொமஸ்டிக் டெர்மினல் சமீபம் இந்த மையம் திறக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் இதனை திறந்து வைத்தார். விமான நிலைய இயக்குனர் எ.சி.கே. நாயர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

நெல்லையில், 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' ரூ.150 கோடியில் தயார்

திருநெல்வேலி:திருநெல்வேலியில், 150 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள, 'சூப்பர் ஸ்பெஷாலிட்டி' மருத்துவமனை, டிசம்பர் மாதம் திறக்கப்படுகிறது. திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், புற்றுநோய் மண்டல சிகிச்சை மையம், இதயவியல், சிறுநீரகவியல் உள்ளிட்ட, 25க்கும் மேற்பட்ட சிறப்பு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. 1,400 படுக்கை வசதி உள்ளது. 

மகளிர் குத்துச் சண்டை: இந்தியாவுக்கு 5 தங்கம்

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டியில் நடைபெற்ற உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில் இந்தியா 5 தங்கப் பதக்கம் வென்றது.

ஆசிய மாரத்தான்: இந்தியாவுக்கு தங்கம்

சீனாவில் நடைபெற்ற 16-ஆவது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கோபி தொனகல் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

ஹாங்காங் ஓபன்: வெள்ளி வென்றார் சிந்து

ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, இறுதிச்சுற்றில் தோல்வி கண்டு வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இன்று


1940 - நவம்பர் 27

புரூஸ் லீ, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான் பிரான்சிஸ்கோ நகரில்,1940நவ., 27ல் பிறந்தார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான இவர், தன், ௧௮வது வயதில், உயர் கல்வி கற்றார். சீன பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இவர், குடும்பத்தாருடன், ஹாங்காங்குக்கு இடம் பெயர்ந்தார். அங்கு, குங்பூ கலையில் தேர்ச்சி பெற்றார். பின், மேற்கத்திய சினிமாவில், சீனாவின் கலாசாரம், குங்பூ கலைகளை பின்பற்றிய படங்களில் நடித்தார். 1971ல் வெளியான, பிக் பாஸ் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. பிஸ்ட் ஆப் பியூரி, வே ஆப் டிராகன் உள்ளிட்ட பல படங்கள், வசூலில் சாதனை படைத்தன.
அமெரிக்கா, ஹாங்காங் நாடுகளில் பிரசித்தி பெற்ற நடிகராகவும், இயக்குனராகவும் விளங்கினார். குங்பூ சண்டை காட்சிகளுடன் பிரமாண்டமான படங்களில் நடித்து புகழ் பெற்றார். இவர், 1973ஜூலை 21ல் காலமானார். அவர் பிறந்த தினம் இன்று.