26 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை கண்காணிக்க 9 பார்வையாளர்கள் நியமனம்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு
ஆர்கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு 9 பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பொது, செலவினம், காவல் பார்வையாளர்கள் அடங்கிய 9 பார்வையாளர்களை கொண்ட குழு, டிசம்பர் 4 ஆம் தேதி சென்னை வரவுள்ளது. வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னர் பார்வையாளர்கள் தங்களது பணிகளை துவக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ்: இறுதி போட்டியில் போராடித் தோற்றார் பிவி சிந்து!
ஹாங்காங்: ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடித் தோல்வியடைந்தார்.
முன்னதாக சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் அவர், முன்னாள் உலக சாம்பியனான தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனானை 21-17, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
வலுவான நிலையில் இந்தியா: விராட் கோலி புது சாதனை
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
மல்யுத்தம்: ரீதுவுக்கு வெள்ளி
போலந்தில் நடைபெற்றுவரும் 23 வயதுக்கு உள்பட்டோருக்கான (யு}23) உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் ரீது போகத் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்தப் போட்டியில் 48 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட ரீது, காலிறுதியில் பல்கேரிய வீராங்கனை செலிஷ்காவை 4}2 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார். அரையிறுதியில், 4}3 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்திய ரீது, இறுதிச்சுற்றில் துருக்கி வீராங்கனை டெமிர்ஹானிடம் வீழ்ந்தார்.