24 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

சிரியாவில் அமைதி : ஈரான் ரஷ்யா, துருக்கி கூட்டாக ஒப்புதல்

மாஸ்கோ: சிரியாவில் உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா,- ஈரான்,- துருக்கி நாடுகள் கூட்டாக முயற்சி மேற்கொண்டுள்ளன.
சிரியாவில் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ரசாயன ஆயுதங்களும் பிரயோகிப்பட்டதால், லட்சகணக்கான மக்கள் பலியாகியுள்ளனர்.

உடல் உறுப்பு தான பதிவுக்கு 'மொபைல் ஆப்' அறிமுகம்

சென்னை: உடல் உறுப்பு தானம் செய்வதற்கான, புதிய, 'மொபைல் ஆப்' இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. தமிழகத்தில், உடல் உறுப்பு தான இயக்கம், 2008ல் துவக்கப்பட்டது. இதுவரை, 5,940 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர்; 1,058 பேர் உடல் உறுப்புகள் தானம் தர, பதிவு செய்துள்ளனர். தேசிய அளவில், உடல் உறுப்புகள் தானம் தருவதில், தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

ஐகோர்ட்டுக்கு புதிய நீதிபதி

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக, சத்ருகன் புஜாரி, நேற்று பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு, தலைமை நீதிபதி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்திய கடற்படைக்கு முதல் பெண் பைலட்

கண்ணுார்: இந்திய கடற்படையின் முதல் பெண் பைலட்டாக, உ.பி.,யைச் சேர்ந்த, சுபாங்கி ஸ்வரூப் நியமிக்கப்பட்டு உள்ளார். புதுச்சேரியைச் சேர்ந்த, ரூபா உட்பட மூன்று பேர், ஆயுதப் பிரிவுஅதிகாரிகளாக நியமிக்கப்பட்டு உள்ளனர். கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது. இங்குள்ள, எழிமலா கடற்படை அகாடமியில், முதன்முறையாக, பெண்கள் பயிற்சிக்கு சேர்க்கப்பட்டனர். 

சேலஞ்சர் டென்னிஸ் அரையிறுதியில் யூகி-சுமித் மோதல்

பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியர்களான யுகி பாம்ப்ரி-சுமித் நாகல் அரையிறுதியில் மோதுகின்றனர்.

இன்று


1961 - நவம்பர் 24
எழுத்தாளர், அருந்ததி ராய், மேகாலயா மாநிலம், ஷில்லாங்கில், ரஜித் ராய் - மேரி ரோஸ் தம்பதிக்கு மகளாக, ௧௯௬௧ நவ., 24-ல் பிறந்தார். இவரது பல படைப்புகளில், சமுதாயத்திலுள்ள பெண் அடிமைத்தனம், குழந்தை தொழிலாளர் பிரச்னை, அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளை விமர்சனத்துக்கு உட்படுத்தினார். மேதா பட்கர் துவக்கிய, 'நர்மதா பச்சாவ் அந்தோலன்' என்ற அமைப்பில் பங்கு கொண்டார். இவரது பல படைப்புகள், சர்வதேச அளவில், பல நாளிதழ்களில் வெளி வந்துள்ளன. 1997ல், தன் முதல் நாவல், 'தி காட் ஆப் ஸ்மால் திங்ஸ்'சுக்கு புக்கர் பரிசு பெற்றார். 2003ல் இவருக்கு, மத்திய அரசின், சாகித்ய அகாடமி பரிசு அறிவிக்கப்பட்டது. ஆனால், அதை வாங்க மறுத்து விட்டார். அவர் பிறந்த தினம் இன்று.