22 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

ஜிம்பாப்வே ராணுவம் அதிரடி : அதிபர் முகாபே ராஜினாமா

ஹராரே: அதிபர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கைகள் பார்லி.,யில் துவங்கிய நிலையில், தென் ஆப்ரிக்க நாடான, ஜிம்பாப்வேயின் அதிபர் பதவியில் இருந்து, ராபர்ட் முகாபே, 93, நேற்றுராஜினாமா செய்தார். ஜிம்பாப்வேயின் பிரதமராக, 1980ல் பொறுப்பேற்ற முகாபே, பின், அதிபரானார். 37 ஆண்டு களாக அவர் அசைக்க முடியாத தலைவராக இருந்து வந்தார். நாட்டின் பொருளாதார வீழ்ச்சி மற்றும் ஊழலை எதிர்த்து, பல மாதங்களாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்

மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில், அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களில், மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.

உலக பலூன் திருவிழா : தமிழகம் பங்கேற்பு

சென்னை : மெக்சிகோ நாட்டில் நடந்த, உலக பலுான் திருவிழாவில், தமிழக சுற்றுலாத் துறை பங்கேற்று, பலுான் பறக்க விட்டுள்ளது. மெக்சிகோ நாட்டில், உலக லியோன் பலுான் திருவிழா, சமீபத்தில் நடந்தது. இதில், 23 நாடுகள் பங்கேற்று, 200 பலுான்களை பறக்க விட்டன. 
இந்தியா சார்பில், முதன்முறையாக, தமிழக அரசின் சுற்றுலாத் துறை பலுான் பங்கேற்றது.

ஏக்நாத் ரானடே 103-வது பிறந்த நாள்

நாகர்கோவில்: கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை நிறுவிய, ஏக்நாத் ரானடேயின் 103-வது பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. கேந்திரா துணை தலைவர் நிவேதிதா தலைமை வகித்தார். கேந்திரா ஊழியர்கள், பிரார்த்தனை பாடல்கள் பாடினர். ஓரங்க நாடகம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடந்தன.

'தலாக்' எதிரான சட்டம் : மசோதா தயாராகிறது

புதுடில்லி: முஸ்லிம்களில், மும்முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறுவதை குற்றமாக அறிவிக்கும் வகையில், பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில், மசோதாவை தாக்கல் செய்ய, மத்திய அரசு தீவிர மாக உள்ளது. முஸ்லிம்களில், 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறையை எதிர்த்து, முஸ்லிம் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 'தலாக் முறை செல்லாது' என, உச்ச நீதிமன்றம், ஆக., 22ல் தீர்ப்பு அளித்தது


பள்ளிக் கல்வியில் ஐக்கியமாகும் தேர்வுத்துறை: தமிழக அரசு புதிய திட்டம்

திண்டுக்கல்: தமிழக அரசுத்தேர்வு துறையை படிப்படியாக பள்ளிக் கல்வித்துறையுடன் இணைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.தமிழக கல்வித்துறையில், அரசு தேர்வுத்துறை ஒரு இயக்குனரின் தலைமையில் தனியாக செயல்பட்டு வருகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு, செய்முறைத் தேர்வுகள் மட்டுமின்றி, எட்டாம் வகுப்பு, சிறப்பு ஆசிரியர்களுக்கான தேர்வுகள் உட்பட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது.இதன் கீழ் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உட்பட 7 மண்டல அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சொத்து பரிவர்த்தனைக்கு ஆதார் இணைப்பு...கறுப்பு பண ஒழிப்பில் அரசு அடுத்த அதிரடி

புதுடில்லி:கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான அரசின், அடுத்த அதிரடி நடவடிக்கை யாக,சொத்து பரிவர்த்தனைஅனைத்துக்கும், ஆதார் அடையாள எண் கட்டாயமாக்கப்பட உள்ளது. இந்த நடவடிக்கையால், சட்ட விரோதமாக சொத்துகளை வாங்கி குவித்தவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

டிசம்பரில் பார்லி கூட்டம் : அமைச்சர் விளக்கம்

புதுடில்லி: "பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பரில் நடக்கும். இதற்கு முன்பும், காங்கிரஸ் ஆட்சியின்போது, டிசம்பரில் கூட்டம் நடந்துள்ளது," என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், அனந்த குமார் தெரிவித்தார்.

யோகாவில் கின்னஸ் சாதனை: மைசூருவுக்கு அங்கீகாரம்

மைசூரு: சர்வதேச யோகா தினத்தையொட்டி, ஜூன் 21ல், கர்நாடகா மாநிலம் மைசூரு ரேஸ்கோர்ஸ் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம், கூட்டு யோகா நிகழ்ச்சி நடத்தியது. இதில், 55 ஆயிரத்து, 506 பேர் பங்கேற்று, யோகா செய்தனர். ஆனால், 54 ஆயிரத்து, 101 பேர் பங்கேற்றதாக, மாவட்ட நிர்வாகம் தவறாக கணக்கிட்டிருந்தது.
அதே நாளில், குஜராத் மாநிலம், ஆமதாபாதில், பாபா ராம்தேவ் தலைமையில் நடந்த, நிகழ்ச்சியில், 54 ஆயிரத்து, 522 பேர் பங்கேற்றதால், கின்னஸ் சாதனையை, அவர்கள் தங்களுடையதாக்கினர்.

உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை: காலிறுதியில் 5 இந்திய வீராங்கனைகள்

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்றுவரும் 5-ஆவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா உள்பட 5 பேர் முறையே தங்களது எடைப்பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணியில் தமிழக வீரரான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (26) சேர்க்கப்பட்டுள்ளார்.

ஹாங் காங் ஓபன்: பிரதான சுற்றில் காஷ்யப்

ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.

தேசிய துப்பாக்கிச் சண்டை: 4 தங்கப் பதக்கம் வென்ற ஷர்துல் விஹான்

தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற 61-ஆவது தேசிய துப்பாக்கிச் சண்டை போட்டியில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஷர்துல் விஹான் (14), ஒரே நாளில் 4 தங்கப் பதக்கங்களை வென்றார்.