21 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

'ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை'

புதுடில்லி: 'ஆதார் தகவல்கள் முழுமையான பாதுகாப்பு உள்ளவை' என, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும், ஆதார் அடையாள அட்டை ஆணையம் கூறியுள்ளது.

'மாஜி' மத்திய அமைச்சர் முன்ஷி காலமானார்

புதுடில்லி: நீண்ட காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த, காங்., மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி, 72, சிகிச்சை பலனின்றி, நேற்று காலமானார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகை

புதுடில்லி: இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகிறார். 4 நாள் அரசு முறைப்பயணமாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இன்று இந்தியா வருகிறார். பின்னர் டில்லி சென்று பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்த் உள்ளிட்டோரை சந்தி்த்து பேசுகிறார்.
பிரதமர் மோடியை சந்திக்கும் விக்ரமசிங்கே, இரு நாடுகளுக்கிடையேயான மீனவர்கள் பிரச்னை, கடலேரா பாதுகாப்பு உள்ளிட்டபல்வேறுவிஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.

மக்கள் நம்பிக்கை: உலகில் 3வது இடத்தில் மோடி அரசு

பாரீஸ்: பொது மக்களின் நம்பிக்கையை அதிகம் பெற்ற அரசுகளில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு 3வது இடம் கிடைத்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி மீண்டும்தேர்வு

ஐக்கிய நாடுகள்: சர்வதேச நீதிமன்ற நீதிபதியாக, இந்தியாவை சேர்ந்த தல்வீர் பண்டாரி தேர்வாகியுள்ளார்.

"லூகர்' பனிச்சறுக்கு விளையாட்டு: இந்தியாவின் சிவா கேசவன் ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி

இந்தியாவின் "லூகர்' பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான சிவா கேசவன், அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றார் டிமிட்ரோவ்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

5 நாள்களும் ஈடன் கார்டன்ஸில் பேட்டிங் செய்து சாதனை செய்த புஜாரா!

கொல்கத்தாவில் நடைபெற்று முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய பேட்ஸ்மேன் புஜாரா 5 நாள்களும் பேட்டிங் செய்து சாதனை படைத்துள்ளார். இதுபோல 5 நாள்களும் பேட்டிங் செய்த 9-வது வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஜெய்சிம்ஹா, ரவி சாஸ்திரிக்குப் பிறகு இதுபோல விளையாடிய 3-வது இந்தியர், புஜாரா.