18 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்
'டெங்கு' இன்சூரன்ஸ் பாலிசி 'பேடிஎம் -ஆப்'பில் அறிமுகம்
டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சைக்கு, 'பேடிஎம்' மொபைல் ஆப்பில், இன்சூரன்ஸ் பாலிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நாட்டின் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. இந்தாண்டில், இதுவரை, 1.30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 200 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும், 20 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு, 52 பேர் உயிரிழந்துள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கு, எல்.ஐ.சி., நிறுவனம் பாலிசி வசதியை ஏற்படுத்தி உள்ளது. அதேபோல், இணைய வசதி வழியாக, பண பரிவர்த்தனைக்கு பயன்படுத்தப்படும், பேடிஎம் ஆப், டெங்கு காய்ச்சலுக்கு, தனியார் நிறுவன இன்சூரன்ஸ் பாலிசியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ஆண்டுக்கு, 99 ரூபாய் செலுத்தி, 15 ஆயிரம் ரூபாய் வரை, டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரமாண்ட துணைமின் நிலையம் : பணியை துவக்கியது, 'பெல்' நிறுவனம்
விழுப்புரம் மாவட்டம், அரியலுாரில், 375 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள, பிரமாண்ட துணை மின் நிலையத்திற்கான கட்டுமான பணிகளை, மின் வாரியம் துவக்கியுள்ளது.
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: நவ.21-இல் தொடக்கம்
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நவம்பர் 21 ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் தொடங்குகிறது.
தேசிய மல்யுத்தம் சுஷில், சாக்ஷிக்கு தங்கம்
தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் சுஷில் குமார், சாக்ஷி மாலிக், கீதா போகத் ஆகியோர் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்றனர்.
இன்று
1936 நவம்பர் 18
வ.உ.சி., என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை, துாத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் என்ற ஊரில், உலகநாத பிள்ளை - பரமாயி அம்மாள் தம்பதிக்கு மகனாக, 1872 செப்., 5ல் பிறந்தார். சட்டம் படித்த அவர், 1895ல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழிலை துவங்கினார்.ஆங்கிலேயர்களின் வணிகத்தை கடுமையாக எதிர்த்தார். இந்தியா, இலங்கை இடையே கப்பல்களை இயக்கியது, பிரிட்டிஷ் அரசு. ஆங்கிலேயர்களின் வணிகத்துக்கே முக்கியத்துவம் கொடுத்தது. இந்தியர்களுக்காக ஒரு கப்பல் நிறுவனத்தை துவக்கினார், வ.உ.சி.
அவரால் துவக்கப்பட்ட சுதேசி நீராவி கப்பல் நிறுவனம், தூத்துக்குடிக்கும், கொழும்புக்கும் இடையே கடல்வழி போக்குவரத்தை மேற்கொண்டது. வணிகர்கள் தங்கள் சரக்குகளை அதில் அனுப்பினர். கடுப்பான பிரிட்டிஷ் அரசு, தேச துரோகி என குற்றஞ்சாட்டி, வ.உ.சி.,க்கு ஆயுள் தண்டனை விதித்தது. அவர், 1936 நவ., 18 ல் காலமானார். வ.உ.சி., இறந்த தினம் இன்று.