08 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

மாநகராட்சியாகிறது காரைக்குடி நவ.18ல் முதல்வர் அறிவிக்க வாய்ப்பு சிவகங்கையும் தரம் உயருகிறது

சிவகங்கை சிவகங்கையில் நவ., 18 ல் நடக்கும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவில் காரைக்குடி நகராட்சியை, மாநகராட்சியாக அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் சிவகங்கை நகராட்சியும் தரம்உயருகிறது.ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டமாக இருந்தபோது 1928 ல் காரைக்குடி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சிவகங்கை மாவட்டமாக பிரிந்த பின் 1988 ல் தேர்வு நிலை நகராட்சியாகவும், 2013 ல் சிறப்பு நிலைநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

துணை கலெக்டர்கள் பதவி உயர்வு

தேனி, முதல்வர் அலுவலக துணைச் செயலர் உட்பட டி.ஆர்.ஓ., நிலையில் 25 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆனால், எட்டு மாதங்களாக துணை கலெக்டர்கள் 19 பேருக்கு பதவி உயர்வு வழங்காமல் தமிழக அரசு இழுத்தடிக்கிறது.டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு மூலம் துணை கலெக்டர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பின், மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு பெறுவர். அந்தப்பணியில் ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த பின் ஐ.ஏ.எஸ்., நிலையில் பதவி உயர்வு அளிக்க வேண்டும். ஆனால், அரசியல் குறுக்கீடுகளால் பதவி உயர்வு கிடைப்பதில்லை. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது 46 துணை கலெக்டர்களுக்கு, டி.ஆர்.ஓ., பதவி உயர்வு பட்டியல் அனுப்பப்பட்டது. அவர் இறந்தபின் அது கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் பட்டியலில் இருந்த 24 துணை கலெக்டர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2015ல் வழக்கு தொடர்ந்து பதவி உயர்வு பெற்றனர்.

இந்தியாவின் 100 வயது மூத்த குடிமகன்: ஹிமாச்சலின் ஸ்டார் வாக்காளர்

சிம்லா: ஹிமாச்சல் சட்டசபை தேர்தல் களம் பரபரப்பு அடைந்து வரும் நிலையில், இம்மாநிலத்தைச் சேர்ந்தவரும் இந்தியாவின் முதல் வாக்காளருமான 100 வயது ஷியாம் சரண் நெகி ஸ்டார் வாக்காளர் என அனைவரின் கவனத்தினை ஈர்த்து வருகிறார்.

'நிர்பயா' ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்: முழுவதும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டுள்ள, நீண்ட துார இலக்கை தாக்கக் கூடிய, 'நிர்பயா' ஏவுகணை, நேற்று வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடர்: முதல் முறையாக கைப்பற்றியது இந்தியா

நியூஸிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆசிய மகளிர் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேரி கோம், சோனியா லேதர்

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சோனியா லேதர் ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினர்.

ஒரே போட்டி- இருமுறை ஹாட்ரிக்: மிட்செல் ஸ்டார்க் சாதனை

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், உள்நாட்டு முதல்தர கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் இருமுறை ஹாட்ரிக் விக்கெட்டுகள் வீழ்த்தி செவ்வாய்க்கிழமை சாதனை படைத்தார்