03 நவம்பர் 2017- நடப்பு நிகழ்வுகள்

முகமது அலி ஜின்னாவின் மகள் காலமானார்

நியூயார்க்: பாக்., தந்தை என அழைக்கப்பட்ட முகமது அலி ஜின்னாவின் ஒரே மகளான தினா வாடியா(98) முதுமை காரணமாக நியூயார்க்கில் காலமானார். தினா வாடியா பாக்., குடியுரிமையை ஏற்க மறுத்து இந்தியராகவே வாழ்ந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பி.எஸ்.என்.எல்., தமிழக தலைமை அதிகாரி நியமனம்

சென்னை: பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், தமிழக தலைமை அதிகாரியாக, மார்ஷல் ஆன்டனி லியோ நியமிக்கப்பட்டு உள்ளார். பி.எஸ்.என்.எல்., தமிழக வட்ட, தலைமை பொது மேலாளராக இருந்த பூங்குழலி, தொலை தொடர்புத் துறையின், தமிழக பிரிவு முதுநிலை துணை தலைமை இயக்குனராக, பதவி உயர்வு பெற்றார். அதை தொடர்ந்து, அப்பணியிடத்துக்கு, மார்ஷல் ஆன்டனி லியோ நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், இதற்கு முன், புதுச்சேரி மற்றும் கடலுார் பிராந்திய முதன்மை பொது மேலாளராக பணிபுரிந்தார். அப்பிராந்தியம், தொடர்ந்து இரு ஆண்டுகள், தேசிய அளவில் சிறந்த இடத்தை பெற்றுள்ளது.

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல்: ககனுக்கு வெள்ளி

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் 50 மீட்டர் ரைஃபிள் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

பாட்மிண்டன் தரவரிசை: 2-ஆவது இடத்துக்கு ஸ்ரீகாந்த் முன்னேற்றம்

இந்திய பாட்மிண்டன் வீரர் ஸ்ரீகாந்த் சர்வதேச தரவரிசையில் 2-ஆவது இடத்துக்கு முன்னேற்றம் கண்டுள்ளார். அவர் தனது தரவரிசை வரலாற்றில் இந்த இடத்துக்கு வருவது இது முதல்முறையாகும்.

ஆசிய குத்துச்சண்டை: காலிறுதியில் மேரி கோம்

ஆசிய மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம், சிக்ஷா ஆகியோர் தங்களது எடைப் பிரிவில் காலிறுதிச்சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

இன்று


1933 நவம்பர் 3

அமர்த்தியா சென், மே.வங்க மாநிலம், சாந்திநிகேதன் என்ற இடத்தில், அஷுதோஷ் சென் - அமிதா தம்பதிக்கு, 1933 நவ., 3ல் பிறந்தார். கோல்கட்டா பிரசிடென்சி கல்லுாரியில், பொருளாதாரம் - மேஜர் மற்றும் கணிதத்தில் - மைனர், பி.ஏ., பட்டம் பெற்றார். கேம்பிரிட்ஜிலுள்ள டிரினிட்டி கல்லுாரியில், துாய பொருளாதாரத்தில் மற்றொரு, பி.ஏ., பட்டத்தைப் பெற்றார். 1972ல், லண்டன் பொருளாதார பள்ளியில், பேராசிரியராக சேர்ந்து, 1977 வரை பணிபுரிந்தார்.பின், ஆக்ஸ்போர்டு பல்கலையிலும், ஹார்வர்டு பல்கலையிலும் பணி புரிந்தார். நோபல் பரிசு, பாரத ரத்னா விருது உள்ளிட்டவற்றைப் பெற்றவர். அவர் பிறந்த தினம் இன்று.